நடிகை ஜெயதேவி காலமானார்

நடிகை ஜெயதேவி காலமானார்
Updated on
1 min read

சென்னை: நடிகையும் இயக்குநருமான ஜெயதேவி சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 65. ஜெயதேவி தனது 20 வயதில் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். இதயமலர், சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு உட்பட சுமார் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், நலம் நலமறிய ஆவல், விலாங்கு மீன், விலங்கு, பாசம் ஒரு வேஷம், பவர் ஆஃப் வுமன் உட்பட 15 திரைப்படங்களை இயக்கி உள்ளார். சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான வேலு பிரபாகரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் ஆன அவர், நேற்று காலை காலமானார். ஜெயதேவியின் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in