Published : 19 Dec 2017 05:13 PM
Last Updated : 19 Dec 2017 05:13 PM

சென்னை பட விழா | தேவிபாலா | டிசம்.20 | படக்குறிப்புகள்

சென்னை 15-வது சர்வதேச பட விழாவில் புதன்கிழமை (டிசம்.20) தேவிபாலா திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

 

காலை 11.15 மணி | THE GREAT BUDDHA | DIR: HSIN-YAO HUANG | MIN NAN |2017 | 102'

பிக்கிள், பிரான்ஸ் வெண்கல சிலை வடிக்கும் தொழிற்சாலையில் ஓர் இரவுநேரக் காவலனாக பணியாற்றுகிறான். அவன் உடன் பணியாற்றுபவன் பெல்லி பாட்டம், பகல்பொழுதில் மறுசுழற்சி செய்யத்தக்க பொருள்களை சேகரிப்பவன். பிக்கிள் அவனது வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான விஷயமே தனது நண்பன் சேகரித்து வைத்துள்ள நிர்வாண சஞ்சிகைகளில் உள்ள பார்க்கும் படங்கள் வழியாகத்தான். தாமதமான இரவு சிற்றுண்டி மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதும் அவர்களின் மந்தமான வாழ்வில் ஒருங்கிணைந்த ஒரு பகுதி. ஒருநாள் தொலைக்காட்சி உடைந்துவிடுவது அவர்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது. அதன்பின்னர் கடவுள் கதைக்குள் வருவது, நடுத்தர வயது மனிதர்களின் உடலியல் ஆசைகள் குறித்து பேய்கள் மற்றும் மனிதர்களின் உரையாடல்கள், என விரிகிறது. ஆனால் பார்வையாளர்களே இதெல்லாம் அபத்தமானது என்று தெரிந்துகொள்ளலாம். ஆனால் அது வாழ்க்கை அல்ல, வாழ்க்கை தன்னளவில் மேலும் தொலைநோக்கு மிக்கது என்பதையும்.

 

பிற்பகல் 2.15 மணி | MFA / MFA | DIR: NATALIA LEITE | ENGLISH |2017 | 95'

நோலே ஒரு கலிபோர்னியா ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூரியில் படிக்கும் இளநிலை மாணவி, தனது ஓவியங்களுக்காக சக ஓவியர்களை கவர்ந்திழுப்பது என்பது அவளுக்கு ஒரு பிரச்சனையே. இதனால் யாருடனும் பழகுவதற்கு பொருந்தாதவளாக அவள் இருக்கிறாள். இத்தகைய சூழ்நிலையில், ஒரு அழகான வகுப்புத்தோழனால் ஒரு பார்ட்டிக்கு அழைக்கப்படுவதை பரவசமாக உணர்கிறாள். ஆனால் அங்கு அவளுக்கு மோசமான அனுபவம் காத்திருந்தது. அவனது அறைக்குள் தூக்கியெறியப்பட்டு கடுமையாகத் தாக்கப்படுகிறாள். பாலியல் வன்முறை நடந்த இரவைத் தொடர்ந்து மறுநாள் அவள் தற்கொலை செய்துகொள்கிறாள்.

 

மாலை 4.45 மணி | A BEAUTIFUL STAR / UTSUKUSHIIHOSHI | DIR: DAIHACHI YOSHIDA | JAPANESE | 2017 | 127'

"ஒரு அழகான நட்சத்திரம்" வெளிப்படையாக வேடிக்கையான ஆனால் உண்மையில் தீவிரமான, கூட மனித சோதனையை பற்றி இருண்மையைக் கொண்டுள்ளது. யுகியோ மிஷிமா 1962 ஆம் ஆண்டில் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது, நகைச்சுவை மிக்கது. ஒரு அறிவியல் புனைகதையாக. இப்படத்தில் உள்ளவர்கள் வேற்று கிரகங்களிலிருந்து வருகிறார்கள். மிஷீமாவின் அறிவியல் புனைகதை நாவலானது, பனிப்போர் யுகத்தின் அணுவாயுதங்களைப் பற்றிய அச்சங்களை பிரதிபலித்தது போலவே, யோஷ்தாவின் இப்படம் சுற்றுச்சூழல் பேரழிவின் விளிம்பில் ஒரு கிரகத்தில் ஒரு நகைச்சுவையாக வெளிப்படுகிறது.

 

மாலை 7.15 மணி | FROST / SERKSNAS | DIR: SARUNAS BARTAS | POLISH | 2017 | 132'

தனது மக்களைப் புரிந்து கொள்ளும் பொருட்டு யுத்தத்தை புரிந்து கொள்ள விரும்பிய ஒரு இளம் லிதுவானியரான ரோக்காஸ் கதை, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லிதுவேனியாவிலிருந்து உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிப்பொருட்களை ஒரு வாகனத்தில் எடுத்துச்செல்கிறான். அவன் அந்த சாலையில் இரண்டு ஆண் பெண் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறான். இந்த மூவருக்குள்ளும் ஒரு நட்பு உருவாகிறது. தங்கள் உளவியல் வரம்புகளை சமாளிக்கவும், வேறுபாடுகளை மறந்து வலுவான உறவை கட்டியெழுப்பவும் அவர்களது அந்த சூழ்நிலை கட்டாயப்படுத்துகிறது, போரின் கொந்தளிப்பின் நடுவில் உள்ள ஒரே உறுதியான நிலையைக் கட்டியெழுப்ப முடியும். அவர்கள் அதைக்கூட தங்கள் சொந்த காரணங்களுக்காக அன்றி அதை வேறெதெற்காகவும் அதை உருவாக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x