Last Updated : 06 Dec, 2017 08:28 PM

 

Published : 06 Dec 2017 08:28 PM
Last Updated : 06 Dec 2017 08:28 PM

மாநகரம் இயக்குநர் இயக்கத்தில் சூர்யா?

'மாநகரம்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மாநகரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

'மாநகரம்' படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தையும் எஸ்.ஆர்.பிரபுவே தயாரிக்க முன்வந்தார். இதன் முதற்கட்டப் பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.

முதலில் இப்படத்தில் கார்த்தி நடிப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது பாண்டிராஜ் இயக்கிவரும் படத்தில் கார்த்தி கவனம் செலுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ஒருவர் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதனால், லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறைந்த நாட்களே படப்பிடிப்பு என்பதால் செல்வராகவன் படத்துக்கு இடையே, இப்படத்தில்  சூர்யா நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள சூர்யா படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x