Published : 17 Dec 2017 06:23 PM
Last Updated : 17 Dec 2017 06:23 PM

சென்னை பட விழா | கேஸினோ | டிசம்.18 | படக்குறிப்புகள்

சென்னை 15-வது சர்வதேச பட விழாவில் திங்கள்கிழமை (டிசம்.18) கேஸினோ திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 9.45 மணி | KILLS ON WHEELS / PLATEIAMARIKIS | DIR: ATTILA TILL | HUNGARIAN | 2016 | 103'

சக்கர நாற்காலியில் இருந்துகொண்டே கொலைகளை செய்யும் கொலையாளி கும்பலைப் பற்றிய ஆக்ஷன் காமெடி படம் ஆகும். தன்னால் எந்தப் பயனும் இல்லை என்ற விரக்தியடைந்த 20 வயது இளைஞன், அவனது நண்பர் மற்றும் முன்னாள் துப்பாக்கி சுடும்வீரர் ஆகியோர் சேர்ந்து மாஃபியா கும்பல் ஒன்றிற்கு தங்கள் சேவைகளை வழங்குகிறார்கள். ஆனால் அவை என்னவென்று தெரியவில்லை. உண்மைக்கும் கற்பனைக்கும் இடையே உள்ள எல்லைகள், தெளிவற்ற சம்பவங்களும் கதையும் ஒரு கலைடாஸ்கோப்பாக சுழற்றி காட்டப்படுகிறது. மாபியா கும்பல்களும் துப்பாக்கிச் சண்டைகளுமாக தொடரும் கதையில் சக்கர நாற்காலி வாழ்க்கை சவாலாக உள்ளது. தந்தை நிராகரித்ததால் அந்த சக்கர நாற்காலி இளைஞர்களின் வாழ்க்கை வலியும் கொண்டாத அமைகிறது.

பகல் 12.15 மணி | THE BLACK CROW / SIYAH KARGA | DIR: MUHAMMET TAYFUR AYDIN | KURDISH / TURKISH | 2016 | 98'

தனது தாய் நாடான ஈரானிலிருந்து வெளியேறிய பெண் இளம் பெண் சாரா, பாரஸில் திரைப்பட நடிகையாக பிரபலமாகிறார். இந்த நிலையில் அவருக்கும் ஈரானிலிருந்து கடிதம் ஒன்று வருகிறது. அதனைத் தொடர்ந்து சாரா ஈரான் செல்ல முடிவு எடுக்கிறார். ஆபத்துக்கள் நிறைந்த துருக்கியின் எல்லையின் வழியே ஈரான் செல்ல சாரா முடிவெடுக்கிறார். இந்த ஆபத்துகளை கடந்து அவர் தனது சொந்த நாடான ஈரான் செல்கிறாரா என்பதை கூறுகிறது தி ப்ளாக் க்ரோ என்ற திரைப்படம்

பிற்பகல் 2.45 மணி | APRIL'S DAUGHTERS / LAS HIJAS DE ABRIL | DIR: MICHEL FRANCO | SPANISH | 2017 | 103'

17 வயதான வலேரியா தனது டீன் ஏஜ் காதலனால் கர்ப்பமாகிறாள். ஆனால் தனது தாய் ஏப்ரலிடம் அவள் அதைப்பற்றி கூறவில்லை. அவளுடைய சகோதரி கிளாரா அவளுக்கு பின்னால் சென்று தாய் ஏப்ரலை போனில் அழைக்கிறாள். அழைக்கும்போது, அவளுடைய மிகவும் அக்கறை மற்றும் கவலை, அக்கறை, கனிவு என உணர்ச்சிவயப்படுகிறாள். ஆனால், குழந்தை பிறந்தவுடன், வலேரியாவின் தாய் ஏப்ரல் ஏன் அவளை நெருங்கவிடாமல் தொலைவில் வைத்திருக்க விரும்பினாள் என்பது விரைவில் தெளிவாகிறது.

மாலை 4.45 மணி | SEX COWBOYS | DIR: ADRIANO GIOTTI | ITALIAN | 2016 | 90'

நிரந்தர வேலை, நிலையான வீடு, வரையறுக்கப்பட்ட வாழ்க்கை எதுவுமில்லாத இளைஞர்கும்பல். நடோடித்தனமான பயணங்களைக் கொணட கதாபாத்திரங்கள், அவர்களது வாழ்வின் நகைச்சுவையில் ஆபத்தான சூழலே அதிகம். சிமோன் கோபத்திற்கும் மார்லாவின் மாய தேவைக்கும் மாற்று, பாசம் மற்றும் பாலியல் தேவைதான். தலைமுறைகளின் நெருக்கடி நமக்குள்ளேயே இருக்கிறது, மற்றும் நமது தற்காலிகக் கனவுகளை உருவாக்கிக்கொள்ள ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும், ஏனெனில் நம் எதிர்காலத்தில் நமக்கு இடமில்லை.

மாலை 7.00 மணி | DAYBREAK / DITA ZE FILL | DIR: GUSTAVO POSTIGLINE | ALBANIAN | 2017 | 85'

லெதாவுக்கு பல மாதங்கள் வாடகைக்கு பணம் செலுத்த முடியவில்லை. அவளும் அவளுடைய ஒரு வயது மகனும் தங்கள் அபார்ட்மெண்ட்டில் இருந்து தூக்கி எறியப்பட்டபோது, சோஃபி என்ற ஒரு வயதான பெண்மணியை பார்த்துக்கொள்ளும் வேலையை ஏற்றுக்கொள்கிறாள். அவளை வேலைக்கு வைத்துக்கொண்டதோடு, அவளுக்குதேவையான உதவிகளையும் செய்கிறாள் வயதான சோபியின் மகள். சோஃபி எனும் வயதான பெண்மணியை நன்றாகப் பார்த்துக்கொண்டாள் போதும் லெதாவுக்கு. அவளுக்கு இனி எந்தப் பிரச்சனையும் இல்லை என்ற நிலை உருவாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x