ஷார்ட் ஃபிளிக்ஸ் தளத்தில் ‘வாழ்வு  தொடங்குமிடம் நீதானே’

ஷார்ட் ஃபிளிக்ஸ் தளத்தில் ‘வாழ்வு  தொடங்குமிடம் நீதானே’

Published on

சென்னை: நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் படம் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே'. ஷார்ட் ஃபிளிக்ஸ் தளத்தில் இன்று வெளியாகிறது. ஜெயராஜ் பழனி இயக்கியுள்ள இந்தப் படத்தை நடிகை நீலிமா தயாரித்துள்ளார். தர்ஷன்குமார் இசை அமைத்துள்ளார். ஆண், பெண்களுக்கு இருக்கும் சுதந்திரத்தைப் போல் தன்பாலின ஈர்ப்பாளர்களின் உணர்வுகளை மதித்து, சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் படம் இது.

படம் பற்றி நீலிமா கூறும்போது, “இந்தக் கதையை படமாக உருவாக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்த போது, என் கணவர் இசை, ‘அவசியம் உருவாக்க வேண்டும். தற்போது இந்த சமூகம் மற்றும் சமுதாயம் செல்லும் பாதையில் இது போன்ற உள்ளடக்கங்கள் அவசியம்’ என்றார். பிறகு இந்தப் படத்துக்குள் ஏராளமான, திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒன்றிணைந்தனர். இதுபோன்ற நல்ல படைப்புக்கு ரசிகர்கள் ஆதரவு வழங்க வேண்டும்'' என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in