Last Updated : 05 Dec, 2017 02:34 PM

 

Published : 05 Dec 2017 02:34 PM
Last Updated : 05 Dec 2017 02:34 PM

டிசம்பர் 11 முதல் தமிழ்படம் 2 படப்பிடிப்பு தொடக்கம்

 சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கவுள்ள தமிழ்படம் 2' படப்பிடிப்பு டிசம்பர் 11ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

2010-ம் ஆண்டு சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'தமிழ்ப் படம்'. அதற்கு முன்பாக வெளியான தமிழ்ப் படங்களின் காட்சிகளை கிண்டல் செய்து இப்படத்தின் காட்சிகளை அமைத்திருந்தார்கள். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதன் 2-ம் பாகத்திற்கான முதற்கட்ட பணிகளில் இயக்குநர் அமுதன் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்தார். சஷிகாந்த் தயாரிக்கவுள்ள இப்படத்தில் சிவா நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும், எடிட்டராக சுரேஷும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

டிசம்பர் 11-ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளார்கள். ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. 'தமிழ்ப் படம்' படத்தைத் தொடர்ந்து 'இரண்டாவது படம்' என்ற படத்தை இயக்கினார் சி.எஸ்.அமுதன். அப்படம் இன்னும் வெளியாகவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x