Published : 05 Dec 2017 14:30 pm

Updated : 05 Dec 2017 14:30 pm

 

Published : 05 Dec 2017 02:30 PM
Last Updated : 05 Dec 2017 02:30 PM

விக்ரம் வேதா இந்தி ரீமேக்: ஷாருக்கான் விலகல்?

'விக்ரம் வேதா' படத்தின் இந்தி ரீமேக்கிலிருந்து ஷாருக்கான் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தமிழில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'விக்ரம் வேதா'. இதன் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற பெரும் போட்டி நிலவி வந்தது. ஆனால், அனைத்து ரீமேக்குகளையுமே தானே தயாரிக்கவுள்ளதாக சஷிகாந்த் தெரிவித்திருக்கிறார்.


இப்படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாயின. தற்போது, அந்த ரீமேக் பேச்சுவார்த்தையிலிருந்து ஷாருக்கான் விலகி இருப்பதாக இந்தி திரையுலகின் முன்னணி செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன. க்ளைமாக்ஸ் காட்சியை இந்திக்காக மாற்ற வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், 'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடித்தால் சரியாக இருக்கும் என்று மாதவனும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். விரைவில் இப்பேச்சுவார்த்தையின் முடிவு என்ன என்பதும், யார் அப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பதும் தெரியவரும்.

'விக்ரம் வேதா' படத்தின் ட்ரெய்லரை ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது நினைவுகூரத்தக்கது. புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலெட்சுமி சரத்குமார், ஷ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சாம் இசையமைத்த இப்படத்துக்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்தார். சஷிகாந்த் தயாரித்திருந்தார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x