Published : 15 Dec 2017 16:38 pm

Updated : 15 Dec 2017 16:38 pm

 

Published : 15 Dec 2017 04:38 PM
Last Updated : 15 Dec 2017 04:38 PM

சென்னை பட விழா | தேவி | டிசம்.16 | படக்குறிப்புகள்

16

சென்னை 15-வது சர்வதேச பட விழாவில் சனிக்கிழமை (டிசம்.16) தேவி திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 11.00 மணி | NEGAR / NEGAR | DIR: RAMBOD JAVAN | PERSIAN | 2017 | 100'


போலீஸ் தகவலின்படி, நெகரின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். ஆனால் நெகர் உணர்வது வேறு. ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த நெகார் மரணத்தைப் பற்றிய சிந்தனை அவருக்கு இருந்திருக்கவில்லை என்பதுதான். அவர் வழக்கத்திற்கு மாறான விசாரணை மூலம் உண்மையை வெளிக்கொணரத் தொடங்குகிறார்.

பிற்பகல் 2.00 மணி | CENTAUR / DIE FLUGEL DER MENSCHEN | DIR: AKTAN ARYM KUBAT | KIRGHIZ | 2017 | 89'

செண்டார் ஒரு அமைதியான, சிறிய மற்றும் எளிமையான மனிதர், ஒரு சிறிய பையனின் அன்பான தந்தை ஒரு வார்த்தை மற்றும் வாய்பேச மற்றும் செவிகேளா மாரிபா எனும் இளம் பெண்ணின் கணவராக அவர் அவப்பெண்ணை கண்டித்து ஒரு வார்த்தையும் பேசியதில்லை. இவர்கள் அன்புடன் இணைந்து சிறிய வாழ்க்கையை அந்த சின்னஞ்சிறிய கிர்கிஸ்தான் கிராமத்தில் நடத்துகின்றனர். செண்டார் தனது அண்டைவீட்டார்கள் மத்தியிலே மிகவும் மரியாதை மிக்கவராக விளங்குகிறார். எவரும் சந்தேகப்படாத வகையில் ஒரு குதிரைத் திருடனாகவும் அவர் இருக்கிறார். அதேநேரத்தில் கிர்கிஸ்தான் நாடோடிப் பழங்குடியினரிடையே நிலவிவரும் குதிரைகள் சார்ந்த தொன்மக்கதைகள் அவருக்குள் ஆழமான நம்பிக்கையாக வேரூன்றி இருக்கிறது. ஆனால் அவர் தன்னைப் பற்றி மறைக்கும் பொய் நீண்டநாள் நீடிக்கவில்லை. ஒருநாள் உண்மை வெளிப்படும்போது அவர் தனது குடும்பத்தின் விதியை நிர்ணயிக்கும் தேவையை உணர்வது அவர் மட்டுமல்ல அந்தக் கிராம வாசிகளும்.

மாலை 4.30 மணி | BEAUTY AND THE DOGS / AALA KAFIFRIT | DIR: KAUTHER BEN HANIA | TUNISIAN | 2017 | 100'

மரியம் ஓர் இளம் துனிசியன் மாணவி. ஒரு பூவைப் போன்ற அழகு மிக்கவள். ஒருநாள் மின்னும் விளக்குகளில் டிஸ்கோ நடனம் ஆடவேண்டுமென்று விரும்புகிறாள். அங்கே யூசுப் என்பவனைச் சந்திக்கிறாள். ஆனால் அன்றைய அவளது வாழ்க்கையில் அன்று ஏற்படும் நிகழ்வுகளால் ஏதோ ஒன்று அவளது றெக்கைகளை உடைக்கிறது. நைட்கிளப்புக்கு வெளியே யூசுப் என்பவனோடு பேசிக்கொண்டிருக்கையில் மூன்று போலீஸ்காரர்கள் அவளை கடற்கரையில் சந்திக்கிறார்கள். ஒரு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபடும்போது, அவர்கள் யூசுஃப்பிடமிருந்து பணம் பறித்துக்கொண்டு மறியத்தை கற்பழித்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். மயக்கமும் வலியும் இருந்தபோதிலும் தன் உடலிலுள்ள கற்பழித்த கறைகளையே சான்றுகளாக்கி அது மறைவதற்குள் போய் அதிகார துஷ்பிரயோகம் செய்த அவர்கள் மீது புகாரை பதிவு செய்துவிட விரும்புகிறாள். அதில் அவள் பிடிவாதமாக இருக்கிறாள். அவளது விடாமுயற்சிக்கு உரிய நீதியை நோக்கி சட்டப்பூர்வமான வழக்காக அது மாறுகிறது.

மாலை 7.00 மணி | APRIL'S DAUGHTERS / LAS HIJAS DE ABRIL | DIR: MICHEL FRANCO | SPANISH | 2017 | 103'

17 வயதான வலேரியா தனது டீன் ஏஜ் காதலனால் கர்ப்பமாகிறாள். ஆனால் தனது தாய் ஏப்ரலிடம் அவள் அதைப்பற்றி கூறவில்லை. அவளுடைய சகோதரி கிளாரா அவளுக்கு பின்னால் சென்று தாய் ஏப்ரலை போனில் அழைக்கிறாள். இதைக் கேள்விப்படும் தாய் கவலை, அக்கறை மற்றும் கனிவு என உணர்ச்சிவயப்படுகிறார். ஆனால், குழந்தை பிறந்தவுடன், வலேரியாவின் தாய் ஏப்ரல் ஏன் அவளை நெருங்கவிடாமல் தொலைவில் வைத்திருக்க விரும்பினார் என்பது விரைவில் தெளிவாகிறது.

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x