ராகவ் சட்டா, பரினீதி சோப்ரா
ராகவ் சட்டா, பரினீதி சோப்ரா

ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சட்டா - நடிகை பரினீதி சோப்ரா செப்.23ல் திருமணம்

Published on

புதுடெல்லி: ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சட்டா - நடிகை பரினீதி சோப்ரா திருமணம் வரும் செப் 23 - 24 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் ராகவ் சட்டா. இவருக்கும் நடிகை பரினீதி சோப்ராவுக்கு கடந்த மே மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பரினீதி சோப்ரா நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை ஆவார். ராகவ் சட்டா, பரினீதி இருவரும் லண்டனில் ஒரே கல்லூரில் பொருளாதாரம் படித்தனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் வரும் செப். 23 - 24 ஆகிய தேதிகளில் திருமணம் நடக்க உள்ளது. இதற்காக ராஜஸ்தான், உதய்பூரில் உள்ள இரண்டு பிரம்மாண்ட நட்சத்திர ஓட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திருமணத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in