என் டிரஸ்ட்டுக்கு பணம் அனுப்ப வேண்டாம்: ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

என் டிரஸ்ட்டுக்கு பணம் அனுப்ப வேண்டாம்: ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
Updated on
1 min read

சென்னை: நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது டிரஸ்ட்டுக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

என் ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் டிவிட் ஒன்றை வெளியிட்டு இருந்தேன். அதில் என் டிரஸ்ட்டுக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்றும் என் குழந்தைகளின் நலனை நானே பார்த்துக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டு இருந்தேன். நான் டான்ஸ் மாஸ்டராக இருந்தபோது என்னால் பெரிய அளவில் உதவி செய்ய முடியவில்லை. அதனால் தான் பிறர் உதவியை கேட்டேன்.

தற்போது வருடத்துக்கு 2 படங்கள் நடித்து வருகிறேன், ஓரளவுக்குப் பணம் வருகிறது. எனவே நானே அதை செய்யலாம் என முடிவு செய்தேன். நான் பணம் வேண்டாம் என்று ஆணவமாகச் சொல்லவில்லை, எனக்கு கொடுக்க நினைக்கும் பணத்தை உங்கள் வீட்டின் அருகில் குழந்தைகள் யாராவது கஷ்டப்பட்டால் அவர்களுக்கு கொடுங்கள். என்னை போல் டிரஸ்ட் வைத்து குழந்தைகளை வளர்த்து வருபவர்களுக்கு கொடுங்கள், அவ்வாறு செய்தால் அது எனக்குச் சந்தோஷமாக இருக்கும்.

இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in