Last Updated : 18 Dec, 2017 12:33 PM

 

Published : 18 Dec 2017 12:33 PM
Last Updated : 18 Dec 2017 12:33 PM

பொங்கல் விடுமுறைக்கு வெளியாகிறது விக்ரமின் ஸ்கெட்ச்

ஜனவரி 12-ம் தேதி பொங்கல் விடுமுறையை கணக்கில் கொண்டு விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'ஸ்கெட்ச்' வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஸ்கெட்ச்'. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவுற்று, இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விக்ரம் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் தமன்னா, ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தமன் இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

விரைவில் பாடல் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது. மேலும், படம் ஜனவரி 12-ம் தேதி வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

சென்னை சத்யம் திரையரங்கில் PRE BOOKING எனப்படும் முன்பதிவு 'ஸ்கெட்ச்' மற்றும் 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்களுக்கு தொடங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x