Published : 15 Dec 2017 04:52 PM
Last Updated : 15 Dec 2017 04:52 PM

சென்னை பட விழா | தாகூர் திரைப்பட மையம் | டிசம்.16 | படக்குறிப்புகள்

சென்னை 15-வது சர்வதேச பட விழாவில் சனிக்கிழமை (டிசம்.16) தாகூர் திரைப்பட மையத்தில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 11.15 மணி | BARRACUDA / LA BARRACUDA | DIR: JASON CORTLUND, JULIA HALPERIN | ENGLISH |2017 | 100'

இங்கிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் சினாலோவா டெக்ஸாஸிற்கு மெர்லே என்பவளைத் தேடி வருகிறாள். அவளுக்கு இவள் தன் இறந்துவிட்ட கிராமத்து இசைக் கலைஞரான தந்தைக்கு இன்னொருவழியில் பிறந்த பாதி சகோதரி. தன்னுடையது ஒரு இசை பாரம்பரியத்தைச் சேர்ந்த குடும்பம் என்று சொல்லிக்கொள்வதை ஒரு வழியிலும் அல்லது இன்னொரு வழியிலும் தனது உடன்பிறவா சகோதரியை சந்திக்க முயல்கிறாள். மெர்லேவின் மனம்கவர அவள் நீண்ட காலம் எடுத்துக்கொள்ளவில்லை. மேலும் அவள் பாடும்போது இருவருக்கும் ரத்தசம்பந்தம் இருப்பது குறித்த அவளுக்குள் எழுந்த சந்தேகங்கள் எல்லாம் அழிந்துவிடும். ஆனால் தோன்றக்கூடிய அனைத்துவிதமான குழப்பங்கள் அதன்பிறகு உருவாகின்றன. மெர்லேவின் நிலையான உலகிலும் விரைவில் சில முடிச்சுகள் அவிழத் தொடங்குகின்றன.

பிற்பகல் 2.15 மணி | AMERIKA SQUARE / PLATEIAMARIKIS | DIR: YANNIS SAKARIDIS | GREEK / ENGLISH | 2017 | 86'

டாட்டூ வரைகலைஞன் பில்லி மற்றும் வேலை கிடைக்காத நகோஸ் இருவரும் சிறந்த நண்பர்கள். வயதான பிரம்மச்சாரியான நகோஸ் நிற வேறுபாடு பார்ப்பவர், அதேநேரத்தில் அன்பானவர் மற்றும் சற்றே மனநிலை பாதிக்கப்பட்டவரும்கூட. கிரேக்கத்தில் புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருவதற்காக கோபப்படுபவர். ஆனால் பில்லி வெளிநாட்டினரின் வருகையை விரும்புபவர். சிரிய அகதியான டாரெக்கை பார்க்கவேண்டி இருவரும் ஏதென்ஸில் உள்ள அமெரிக்க சதுக்கத்தில் சந்திக்கின்றனர்.

மாலை 4.45 மணி | TIGER GIRL | DIR: JAKOB LASS | GERMAN / ENGLISH | 2017 | 90'

மாகி, காவல்துறையில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வில் பரிதாபமாக தோற்கிறாள். ஆனால் தனது தீராத தாகத்தால், வெறும் பாதுகாப்பு காவலாளியாகவாவது ஆகலாம் என முயற்சிக்கிறாள். அவளது இயலாமைத்தனம் அவளை பாதிக்கிறது. சுற்றியிருப்பவர்கள் அவளை ஏளனம் செய்கின்றனர். ஒரு நாள், டைகர் என்பவளை மாகி பார்க்கிறாள். பேஸ்பால் மட்டையை வைத்துக் கொண்டு வலிமையோடு திரியும் டைகர், மாகியின் பெயரை வெண்ணிலா என மாற்றுகிறாள். அதோடு, மாகிக்கு வீரத்தை கற்றுத் தருகிறாள். தான் பழகும் வன்முறையின் மூலம் மாகிக்கு பரவசம் கிடைக்க ஆரம்பிக்கிறது.

மாலை 7.15 மணி | THE SIXTH TIME / KUUDERS KERTA | DIR: MAARIT LALLI | FINNISH | 2017 |109'

பிஹ்லா வீடலா எனும் தனியார் பெண் துப்பறிவாளர் ரியல் எஸ்டேட் தரகர் ஆன்டிலூயிஸ்யுனியெமியுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கிறாள். ஆனால் ஆறாவது முறையான அவர்களது சந்திப்பின்போது எதிர்பாராத திருப்பத்தை நோக்கி நகரத் தொடங்குகிறது அந்த நட்பு. அவர்களது சொர்க்கத்தில் ஒரு நிழல் விழத் தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x