Published : 16 Dec 2017 05:34 PM
Last Updated : 16 Dec 2017 05:34 PM

சென்னை பட விழா | அண்ணா | டிசம்.17 | படக்குறிப்புகள்

சென்னை 15-வது சர்வதேச பட விழாவில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்.17) அண்ணா திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 9.30 மணி | 5 WOMEN / FUNF FRAUEN | DIR: OLAF KRAEMER | GERMAN / ARMENIAN | 2016 | 97'

மேரி, அன்ன, ஜின்னெட், நோரா மற்றும் ஸ்டெஃபனி ஐவரும் பால்ய கால நண்பர்கள். ஒவ்வொரு கோடையிலும் இந்த ஐவரும் மேரியின் பெற்றோர்களின் எஸ்டேடில் சந்திப்பது வழக்கம். அப்படி ஒரு வார இறுதியில் இவர்களது மகிழ்ச்சியான சந்திப்பு, வீட்டுக்குள் அத்துமீறி நுழையும் ஒருவனால் பாதிக்கப்படுகிறது. தெரியாமல் ஒரு அசந்தர்ப்பமும் நடக்கிறது. அடுத்த நாள் காலை அவர்கள் மத்தியில் ஒரு பிணம் இருக்கிறது. இப்போது அதை அவர்கள் அப்புறப்படுத்த வேண்டும். அந்த நேரம் பார்த்து, வசீகரமான இன்னொரு அந்நியன், மேரியின் சகோதரனின் நண்பன் என்று அங்கே வருகிறான். ஐந்து பெண்களின் நட்புக்கும் சோதனை ஆரம்பமாகிறது.

பகல் 12 மணி | MANJAN / MANJAN | DIR: RAHMAN SEYFI AZAD | PERSIAN | 2017 | 100'

மொலாட் மற்றும் ஹாஷெம் அவர்களின் நோயுற்ற மகனை வைத்திருக்க வேண்டும் என்பதில் வாதம் உருவாகிறது,

மொலாட் அவர்களின் மகனை பலம் குன்றிய நுரையீரல் உடையோர் நலனுக்கான மருத்துவ இல்லத்துக்கு அனுப்பி வைப்பதற்கு ஹாஷெம் எதிர்க்கிறான். ஷாஹெம் அவளை விவாகரத்து செய்வதென முடிவெடுப்பதற்கு இயலாமல் குழந்தையை வைத்துக்கொள்ளச் சொல்லி

மொலாட் கடும் நெருக்கடியைத் தருகிறாள். ஹாஷெம் மறுமணம் புரிந்துகொள்ள விரும்பி இரண்டாவது மனைவியிடம் பேசுகிறான். ஆனால் அப்பெண்ணோ குழந்தையை பார்த்துக்கொள்ள முடியாது எனக் கூறுகிறாள். இதனால் மனநிலை உடைந்த ஹாஷெம் வேலையை விடும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

பிற்பகல் 2.30 மணி | THE GREAT BUDDHA | DIR: HSIN-YAO HUANG | MIN NAN |2017 | 102'

பிரான்ஸ் வெண்கல சிலை வடிக்கும் தொழிற்சாலையில் ஓர் இரவுநேரக் காவலனாக பிக்கிள் பணியாற்றுகிறான். அவன் உடன் பணியாற்றுபவன் பெல்லி பாட்டம், பகல்பொழுதில் மறுசுழற்சி செய்யத்தக்க பொருள்களை சேகரிப்பவன். பிக்கிள் அவனது வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான விஷயமே தனது நண்பன் சேகரித்து வைத்துள்ள நிர்வாண சஞ்சிகைகளில் உள்ள பார்க்கும் படங்கள் வழியாகத்தான். தாமதமான இரவு சிற்றுண்டி மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதும் அவர்களின் மந்தமான வாழ்வில் ஒருங்கிணைந்த ஒரு பகுதி. ஒருநாள் தொலைக்காட்சி உடைந்துவிடுவது அவர்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது. அதன்பின்னர் கடவுள் கதைக்குள் வருவது, நடுத்தர வயது மனிதர்களின் உடலியல் ஆசைகள் குறித்து பேய்கள் மற்றும் மனிதர்களின் உரையாடல்கள், என விரிகிறது. ஆனால் பார்வையாளர்களே இதெல்லாம் அபத்தமானது என்று தெரிந்துகொள்ளலாம். ஆனால் அது வாழ்க்கை அல்ல, வாழ்க்கை தன்னளவில் மேலும் தொலைநோக்கு மிக்கது என்பதையும்.

மாலை 4.30 மணி | I REMEMBER YOU / EG MAN PIG | DIR: OSKAR THOR AXELSSON | ICELANDIC | 2017 | 105'

ஐஸ்லாந்து நாட்டின் வனாந்தரமான வெஸ்ட்ஃப்ஜோர்ட்ஸ் நிலப்பகுதியில் உள்ள தேவாலயத்தில் ஒரு வயதான பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு விடுகிறார். இந்த பிராந்தியத்தில் முதியோரின் பல விசித்திரமான இறப்புக்கள் விசாரணை செய்ய வழிவகுக்கிறது. ப்ரேயர், நகரத்தில் ஒரு புதிய மனநல மருத்துவராக வருகிறார். விரைவில் சில உண்மைகளைக் கண்டுபிடிக்கிறார். இறந்துபோன பெண், தனது மூன்று வயது மகன் காணாமற் போனதால், மூன்று வருடங்களுக்கு முன்னர் எந்தவித தடயங்களும் இன்றி ஒரு தடவை மறைந்துவிட்டதை அவர் காண்கிறார். வளைகுடாவுக்கு அப்பால் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில், மூன்று நகரவாசிகள் இயற்கைக்கு மாறான விஷயங்கள் நடைபெறுவதைப் பார்த்து அவ்வீட்டை மீட்கிறார்கள். இதில் இரண்டு கதைகள் பின்னப்பட்டுள்ளன. 60 ஆண்டுகளுக்கு முன்னர் மர்மமான முறையில் மறைந்த ஒரு பையனின் இறப்புக்கும் இதனோடு தொடர்பிருப்பது தெரியவருகிறது.

மாலை 7.15 மணி | BORNHOLMER STREET / BORNHOLMER STREET | DIR: CHRISTIAN SCHWOCHOW | GERMAN | 2014| 97'

நவம்பர் 9, 1989 அன்று, வெளிநாடுகளுக்கான பயணத்துக்கு எந்த முன் நிபந்தனைகளும் இல்லை என்ற அறிவிப்பை ராணுவ அதிகாரி ஹரால்ட் தொலைக்காட்சியில் பார்க்கிறார். சிறிது நேரத்துக்கெல்லாம் கிழக்கு பெர்லினை சேர்ந்தவர்கள், மேற்கு பெர்லினுக்கு செல்ல, எல்லையில் வரிசை கட்டி நிற்கின்றனர். அவர்களை அனுமதிக்கும் முடிவை ஹரால்ட் எடுக்க வேண்டும். அவர் மேலதிகாரிகளை கேட்க, அவர்களோ இதிலிருந்து விலகியே இருக்கிறார்கள். நேரம் ஆக ஆக நிலைமை கட்டுக்கடங்காமல் போகிறது. மேற்கு பெர்லின் எல்லையிலும் அப்படியே. பெர்லின் சுவர் வீழ்ந்ததின் நகைச்சுவையான கோணம் இது. ஹரால்ட் வரலாற்று நாயகனான தருணம் எப்படி வந்தது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x