விருதுகள் மீது நம்பிக்கையில்லை: விஷால்

விருதுகள் மீது நம்பிக்கையில்லை: விஷால்
Updated on
1 min read

சென்னை: நடிகர் விஷால் தனது 46-வது பிறந்த தினத்தை ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கி நேற்று கொண்டாடினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: சூப்பர் ஸ்டார் சர்ச்சைப் பற்றி கேட்கிறார்கள். அந்தப் பட்டம் 45 வருஷம் முன் ரஜினிகாந்துக்கு கொடுக்கப்பட்டது. இன்றுவரை அதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமில்லை. எங்களை போன்ற நடிகர்களுக்கு அவர் ஊக்கமளிப்பவராகவும் உற்சாகம் தருபவராகவும் இருக்கிறார்.

தேசிய திரைப்பட விருதுகள் பற்றி கேட்கிறார்கள். 4 பேர் சேர்ந்து கொடுக்கிற விருதுகள் மீது நம்பிக்கையில்லை. ரசிகர்கள் கொடுக்கிற விருதுகளால்தான் நாங்கள் நடித்து வருகிறோம். நடிகர் சங்கக் கட்டிடத்தை கட்டி முடிப்பது தான் சங்க நிர்வாகிகளான எங்களின் இப்போதைய நோக்கம். தமிழ்நாட்டு மக்களுக்கு பெருமைதரக்கூடிய கட்டிடமாகஅது இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு தாமதம். இவ்வாறு விஷால் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in