Published : 14 Dec 2017 15:44 pm

Updated : 14 Dec 2017 17:28 pm

 

Published : 14 Dec 2017 03:44 PM
Last Updated : 14 Dec 2017 05:28 PM

சென்னை பட விழா | அண்ணா | டிசம்.15 | படக்குறிப்புகள்

15

சென்னை 15-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை (டிசம்.15) அண்ணா திரையரங்கில் திரையிடப்படும் படங்களின் அறிமுகக்குறிப்புகள் இவை »

காலை 9.30 மணி | EASY / UN VIAGGIO FACILE FACILE | DIR: ANDREA MAGNANI | USA / ITALIAN / UKRAINIAN / ENGLISH | 2017 | 91'


ஒரு பந்தய கார் ஓட்டுநர் இசிடோரோ தனது தொழிலில் நன்றாக சம்பாதிக்கத் தொடங்கும்போது எதிர்பாராமல் அவரது எடையே அவரது வேலைக்கு உலை வைக்கிறது. அவர் இனி எப்போதுமே பந்தய கார் ஓட்டுநராக முடியாது என உறுதியாகிறது. இந்நிலையில் அவரது சகோதரரே அவருக்கு ஒரு வேலை வாய்ப்பை வழங்குகிறார்.

பகல் 12 மணி | MR.STEIN GOES ONLINE / UN PROFIL POUR DEUX | DIR: STEPHANE ROBELIN | FRANCE / BELGIUM / GERMANY | 2017 | 90'

பியர், ஓய்வுபெற்ற, மனைவியை இழந்த முதியவர். தனது வீட்டை விட்டு 2 வருடங்கள் வெளியே வராமல் முடங்கிக் கிடந்தவர். ஆனால் தனது மகளின் முயற்சியால், அலெக்ஸ் என்ற இளைஞனின் உதவியோடு கணினி பற்றியும், இணையம் பற்றியும் தெரிந்து கொள்கிறார். அதில், ஒரு சமூக வலைதளத்தில் ஃப்ளோரா என்ற பெண்ணை சந்திக்கிறார். ஆனால் அவர் பக்கத்தில் இருப்பதோ அலெக்ஸின் புகைப்படம். அலெக்ஸின் முகத்தை பார்த்து பியரிடம் பேசுகிறாள் ஃப்ளோரா. பியரின் ரொமாண்டிக் உரையாடல்களால் காதலில் விழுகிறாள். இருவரும் சந்திக்க முடிவு செய்கின்றனர். தனக்கு பதிலாக புகைப்படத்தில் இருக்கும் அலெக்ஸை போகச் சொல்கிறார் பியர். ஏற்கனவே காதலி இருக்கும் அலெக்ஸும் அரை மனதாக சம்மதிக்கிறான். பிறகு?

பிற்பகல் 2.00 மணி | THE TOWER / DER TURM | DIR: CHRISTIAN SCHWOCHOW | GERMAN | 2012 | 180'

கிழக்கு ஜெர்மனி கம்யூனிஸ்ட் ஆட்சியின் இறுதி காலத்தில் நடக்கும் கதை. 1982. அடக்குமுறை அரசில் விரிசல் விழ ஆரம்பிக்கிறது. அடக்குமுறைகளையும் மீறி படித்தவர்கள் சிலர், அதே அமைப்பில் கூடுதல் சலுகைகளை பெறுகிறார்கள். ஹாஃப்மேன் குடும்பத்தினர் அந்தஸ்து மிக்கவர்களுடன், அரசியல் வாதிகளுடன், இசை, கேளிக்கைகளுடன் விருந்துக்காக அடிக்கடி கூடுகின்றனர். ரிச்சர்ட் தனக்கென பல கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்தாலும் அவன் தனது இரண்டாவது வாழ்க்கையை பற்றி ரகசியங்களை மறைத்து வைத்திருக்கிறான். பயமும், நம்பிக்கையின்மையும் அதிகரிக்கும் சூழலில், ரகசிய போலீஸ் நிழலாக பின் தொடர, எடுக்கப்படும் முடிவுகளால் வரும் விளைவுகள் பேரழிவுக்கு வித்திடுமா?

மாலை 5.00 மணி | SEVEN DAYS / SETTE GIORNI | DIR: ROLANDO COLLA | ITALY, SWITZERLAND | 2016 | 96'

இவானும் சியாராவும் ஒரு சிறிய சிசிலியன் தீவில் சந்தித்துக்கொள்கிறார்கள். இவானின் சகோதரனும் சியாராவின் சிறந்த நண்பருமானவருக்கு திருமணம் நடைபெற இன்னும் 7 நாட்களே உள்ளன. இவானின் அச்சம் எல்லாம் அவனது பழைய உறவில் ஏற்பட்ட தோல்விகளைப் பற்றித்தான். இந்நிலையில் சியாராவின் திருமணத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பாத நிலையில் அந்த ஜோடி காதலில் விழுகிறது. அவர்கள் இருவரும் ஒன்றாக முடிவெடுக்கின்றனர். இதனால் தங்கள் திருமணநாளை தள்ளிப்போட அவர்கள் விரும்புகிறார்கள். ஒரு ஏழு நாட்களில் ஏழு அத்தியாயங்களில் ஏழு அத்தியாயங்களில் உணர்ச்சிமயமான நிலைகளை விவரிக்கிறது.

Festivals & Awards 12th Zurich Film Festival-Section: Gala Premieres - Category Film & Animation

மாலை 7.15 மணி | BARRACUDA / LA BARRACUDA | DIR: JASON CORTLUND, JULIA HALPERIN | ENGLISH |2017 | 100'

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு அந்நியப் பெண் தனது உடன்பிறவா சகோதரியைத் தேடி டெக்ஸாஸ் வருகிறார். தன்னுடையது ஒரு இசை பாரம்பரியத்தைச் சேர்ந்த குடும்பம் என்று சொல்லிக்கொள்கிறார். ஒரு வழியிலும் இன்னொரு வழியிலும் வேறொரு தாய்க்கும் தனது தந்தைக்கும் பிறந்த பாதி சகோதரியை சந்திக்க முயல்கிறார். அவளுக்கு இவள் தன் இறந்துவிட்ட கிராமத்து இசைக் கலைஞரான தந்தைக்கு இன்னொரு வழியில் பிறந்த பாதி சகோதரி. மெர்லேவின் மனம்கவர அவள் நீண்ட காலம் எடுத்துக்கொள்ளவில்லை. மேலும் அவள் பாடும்போது இருவருக்கும் ரத்தசம்பந்தம் இருப்பது குறித்த அவளுக்குள் எழுந்த சந்தேகங்கள் எல்லாம் அழிந்துவிடும். ஆனால் தோன்றக்கூடிய அனைத்துவிதமான குழப்பங்கள் உருவாகின்றன. மெர்லேவின் நிலையான உலகிலும் விரைவில் சில முடிச்சுகள் அவிழத் தொடங்குகின்றன


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author