Published : 20 Dec 2017 05:53 PM
Last Updated : 20 Dec 2017 05:53 PM

ரேடியோ திருடுப் போனால்?

|15-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் டிசம்பர் 21-ம் தேதி ரஷ்ய கலாச்சார மையத்தில் பிற்பகல் 12:30 மணிக்கு திரையிடப்படவுள்ள ‘ரேடு’ மராத்தி படம் பற்றிய பார்வை|

ஒரு ரேடியோ எப்படிப்பட்ட மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும்? இன்றைய காலத்தில் ரேடியோ கேட்பவர்களே அரிது. ஆனால் 70களின் ஆரம்பத்தில், ரேடியோ அற்முகமான புதிதில் பலருக்கு வாழ்க்கையில் புதிய அத்தியாயமே தொடங்கியது போல இருந்தது.

டாடு என்கிற முன்கோபக்கார, நடுத்தர் வயது மனிதர், ஒரு ரேடியோவைப் பார்த்து அதிசயிக்கிறார். இவர் பார்த்து வியந்த அந்த சாதனத்தை, இவரது மைத்துனர் பரிசாக அளிக்கிறார். டாடுவின் சாதரண வாழ்க்கை ரேடியோவின் வருகையினால் வண்ணமயமாகிறது. அந்த ரேடியோ குடும்ப டாடுவின் உறுப்பினரைப் போல மாறுகிறது. அப்படிப்பட்ட மனதுக்கு நெருக்கமான ரேடியோ காணாமல் போனால்? அதை டாடு தேடும் முயற்சி என்ன ஆனது?

மராத்திய மொழிப் படமான 'ரேடு'வின் எளிமையான, அழகான கதை இதுதான். 'ரேடு' என்றால் மராத்தியில் ரேடியோ என்று பொருள். படத்தின் இயக்குநர் சாகர் வஞ்சரி பேசுகையில், "மனிதர்களின் உணர்வுகளைப் பேசும் பல எகிப்திய படங்களைப் பார்த்துதான் நான் திரைப்பட இயக்கத்தைக் கற்றுக்கொண்டேன். ஒரே மாதிரி சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு நிவாரணமாக ரேடியோ அப்போது இருந்தது. அதே போல இன்றைய ஊடக தாக்கத்தின் முன்னோட்டமாகவும் அதை நான் பார்த்தேன். புதிதாக வரும் ஒரு கருவியால் நமது சமூகத்தில் என்ன மாற்றங்கள் வருகிறது என்பதையும் இதில் கூற முயற்சித்துள்ளேன். இன்று ஒரு கருவி தொலைந்தால் நாம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் அன்றைய காலத்தில் அப்படியில்லை" என்றார்.

சாகர் வஞ்சரி முன்னாள் படத்தொகுப்பாளர். இவர் படத்தொக்குப்பு செய்த 'இன்வெஸ்ட்மெண்ட்' என்ற திரைப்படம் 2012ம் ஆண்டு, சிறந்த மராத்திய மொழி படத்துக்கான தேசிய விருதை பெற்றது.

'ரேடு' 23 நாட்களில் படமாக்கப்பட்டது. 55 உள்ளூர் நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். மராத்திய சினிமாவில் அதிகம் கேட்கமுடியாத மால்வாணி பேச்சுவழக்கு இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தார் ரோடுகள் தெரியாமல், மண்-செங்கல் வீடுகளை மட்டும் வைத்து 70 சூழலை காட்டுவது இவர்களுக்கு கடினமாக இருந்ததாம்.

கெய்ரோ திரைப்பட விழாவில் தங்க பிரமிட் விருதுக்கு கடும் போட்டியாக 'ரேடு' இருந்தது. படத்தின் திரையிடல் கெய்ரோ ஓபரா ஹவுஸ் என்ற மைய அரங்கில் நடந்த போது அரங்கம் நிரம்பியது குறிப்பிடத்தக்கது. 13 நாடுகளிலிருந்து 15 படங்கள் போட்டியிட்ட கெய்ரோ திரைப்பட விழாவின் சர்வதேச போட்டி பிரிவில் இடம்பெற்ற ஒரே இந்தியப் படமும் 'ரேடு' தான்.

'ரேடு'வின் ப்ரீமியர் கொல்கத்தா திரைப்பட விழாவில் சென்ற மாதம் நடந்தது. தொடர்ந்து கோவா திரைப்பட விழாவில் ரேடு பங்கேற்றது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x