Published : 18 Dec 2017 07:13 PM
Last Updated : 18 Dec 2017 07:13 PM

சென்னை பட விழா | தாகூர் திரைப்பட மையம் | டிசம்.19 | படக்குறிப்புகள்

சென்னை 15-வது சர்வதேச பட விழாவில் செவ்வாய்க்கிழமை (டிசம்.19) தாகூர் திரைப்பட மையத்தில் திரையிடப்படும் படங்களின் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 11.15 மணி | MARACAIBO | DIR: MIGUEL ANGEL ROCCA | ARGENTINA | 2017 | 95'

ஓர் அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் துப்புறியும் நிபுணர்போல் விசாரணைக் களத்தில் குதிக்கிறார். காரணம் அவரது மகனின் கொலை. மகனைக் கொன்றதாக அவரது சகதோரரை போலீஸார் கைது செய்துவிடுகின்றனர். ஆனால், அந்தக் கைதையும் தாண்டி விரிகிறது அந்த மருத்துவரின் விசாரணை.

பகல் 2.15 மணி |WRATH / IRA | DIR: JOTA ARONAK | GERMAN | 2017 | 93'

ஒரு பத்திரிகையாளரான ஐகெர் தனது முதல் டாக்குமெண்டரி படத்தை எடுக்க சீசர் மாயோவை சந்திக்கிறார். இந்த சீசர் தன் மகன் கொலையுண்டதை நேரில் பார்த்த சாட்சி அவர் என்பதை தெரிந்துகொள்கிறார். சீசர், ஐகெரிடம் நீங்கள் எடுக்கப்போகும் படம் கொலைக்கு பழிவாங்கும்விதமாக இருக்கவேண்டும் என கோரிக்கை வைக்கிறார். ஐகெரும் தனது படத் தயாரிப்பு குறிக்கோளுடன் ஏற்றுக்கொள்கிறார். கொலை செய்யப்பட்ட இளைஞரையும் அதைச் சுற்றியுள்ள விசித்திரமான சூழ்நிலைகளையும் ஐகெர் கண்டுபிடிக்கிறார். குற்றத்திற்காக வழங்கப்படும் நீதி என்பதே ஒரு மாயை என்ற எண்ணம் அவருக்கு. அதனால் தண்டனையை தானே நேர் செய்ய விரும்புகிறார். அதற்காக தனது திட்டத்தை கையாள்கிறார் ஐகெர். அவரது மகனின் குற்றவாளி ஃபேபியான் அரியாஸ் மீது நீதிபதி தனது தீர்ப்பை செயல்படுத்தும் வடிவத்தையும், நேரத்தையும், முறையையும் முடிவு செய்ய அவர் சட்டப்பூர்வ பாதுகாப்பிற்கான தண்டனையைப் பயன்படுத்துகிறார்.

மாலை 4.45 மணி | GOLDEN YEARS / NOSANNEESFOLLES | DIR: ANDRE TECHINE | FRANCE / FRENCH | 2017 | 103'

முதல் உலகப்போரிலிருந்து தப்பி வந்த வீரன் பாலின் உண்மைக் கதை இது. அவனது அடையாளத்தை மறைக்க, அவனது மனைவி லூயி, பாலுக்கு பெண் வேடமிடுகிறாள். பாரிஸில் சூஸனாக நடமாடுகிறான் பால். போர் முடிந்ததும், சூஸன் மீண்டும் பால் என்ற அடையாளத்தை பெற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

மாலை 7.15 மணி | THE PRESIDENT / EL PRESI | DIR: GUSTAVO POSTIGLINE | ARGENTINA | 2017 | 70'

தேர்தலில் வென்ற ஜனாதிபதி அன்று இரவுக்கு முன் நகரத்தை காரில் வலம் வருகிறார். தனது முன்னாள் மனைவி, தனது காதலி, மற்றும் தனது மகளிடமிருந்து அசௌகரியத்தை ஏற்படுத்தும்விதமாக போன் அழைப்பு, இன்னும் பல சூழ்நிலைகளுக்கு நடுவில் தனது இமேஜ்ஜுக்கான ஆலோசகரை அன்று இரவு சந்திக்கிறார். இந்த கதாபாத்திரத்தின் நெருக்கத்தை நாம் கண்டறிகிற அதே வேளை, ஒரு ரகசியத்தையும் ஒரு குற்றத்தையும் மறைக்கும் இந்த கதாபாத்திரத்தின் விதியை மாற்றக்கூடியதாக அது இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x