Published : 18 Dec 2017 07:00 PM
Last Updated : 18 Dec 2017 07:00 PM

சென்னை பட விழா | தேவிபாலா | டிசம்.19 | படக்குறிப்புகள்

சென்னை 15-வது சர்வதேச பட விழாவில் செவ்வாய்க்கிழமை (டிசம்.19) தேவிபாலா திரையரங்கில் திரையிடப்படும் படங்களின் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 11.15 மணி | INTERCHANGE / PRZEMIANA | DIR: DAIN SAID | ENGLISH / MALAY | 2017 | 102'

தடயிவியல் புகைப்பட நிபுணர் மந்திரதந்திர மற்றும் மர்ம உயிர்களின் உலகத்திற்குள் ஈர்க்கப்படுகிறார். அதன்மூலம் சமூகத்தில் நடைபெறும் கொடூரமான தொடர் கொலைகளைக் கண்டறிய உதவிகள் கிடைக்கின்றன.

பிற்பகல் 2.15 மணி | 5 WOMEN / FUNF FRAUEN | DIR: LARS HENNING | GERMAN / ARMENIAN | 2016 | 97'

மேரி, அன்ன, ஜின்னெட், நோரா மற்றும் ஸ்டெஃபனி ஐவரும் பால்ய கால நண்பர்கள். ஒவ்வொரு கோடையிலும் இந்த ஐவரும் மேரியின் பெற்றோர்களின் எஸ்டேடில் சந்திப்பது வழக்கம். அப்படி ஒரு வார இறுதியில் இவர்களது மகிழ்ச்சியான சந்திப்பு, வீட்டுக்குள் அத்துமீறி நுழையும் ஒருவனால் பாதிக்கப்படுகிறது. தெரியாமல் ஒரு அசந்தர்ப்பமும் நடக்கிறது. அடுத்த நாள் காலை அவர்கள் மத்தியில் ஒரு பிணம் இருக்கிறது. இப்போது அதை அவர்கள் அப்புறப்படுத்த வேண்டும். அந்த நேரம் பார்த்து, வசீகரமான இன்னொரு அந்நியன், மேரியின் சகோதரனின் நண்பன் என்று அங்கே வருகிறான். ஐந்து பெண்களின் நட்புக்கும் சோதனை ஆரம்பமாகிறது.

மாலை 4.45 மணி | HEARTSTONE / HJARTASTEINN | DIR: GUOMUNDUR AMAR GUOMUNDSSON |ICELANDIC | 2016 | 129'

ஐஸ்லாந்தில் ஒரு தொலைதூர மீன்பிடி கிராமம். டீனேஜ் பையன்கள் தோர் மற்றும் கிறிஸ்டியன் அனுபவத்தில் ஒரு கொந்தளிப்பான கோடைக் காலம், ஒரு பெண்ணின் இதயத்தை வென்றெடுக்க முயற்சிக்கும் போது, மற்றவர் தனது சிறந்த நண்பருடன் புதிய உணர்ச்சிகளைக் கண்டுபிடிக்கிறார். கோடை முடிவடைய நேரம் வருகிறது. ஐஸ்லாந்தின் கடுமையான குளிர் உருவாவதற்கான தட்பவெட்பநிலையில் ஐஸ்லாந்தின் இயற்கைச் சூழல் சற்றே மாறத் தொடங்குகிறது. அந்த பருவமாற்றத்தின்போது, இந்த பையன்கள் அந்த விளையாட்டு மைதானத்தை விட்டு வெளியேறவும், முதிர்ச்சியை எதிர்கொள்ளவுமான காலமாக அமைகிறது.

மாலை 7.15 மணி | ITALY, ITALY / ITALIA, ITALIA | DIR: KAVEH SABBAGHZADE | PERSIAN | 2017 | 100'

பெர்ஃபாவும் நாடெரும் ஒருவரையொருவர் நேசித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். திருமணத்திற்கு முன்னிருந்த மகிழ்ச்சி பின்னர் ஏனோ காணாமல் போகிறது. எதிர்பாராத விதமாக குழந்தையை கருக்கலைப்பு செய்யவேண்டிய நிலை. அதனால் உளவியல்ரீதியாக இருவருக்கும் பிரச்சனைகள். இருவரும் அவரவர் வேலைநிமித்தம் புறப்பட்டுச் செல்ல அது பிரிவுக்கும் வழிவகுக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x