Published : 14 Dec 2017 04:08 PM
Last Updated : 14 Dec 2017 04:08 PM

சென்னை பட விழா | தேவி | டிசம்.15 | படக்குறிப்புகள்

சென்னை 15-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை (டிசம்.15) தேவி திரையரங்கில் திரையிடப்படும் படங்களின் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 11.00 மணி | BLIND SPOT / DODE HOEK| DIR: NABIL BEN YADIR | DUTCH / FRENCH | 2017 |95'

ஆன்ட்வெர்ப் நகரின் போதை மருந்து தடுப்புக்காவல் ஆணையர் ஜான் வெர்பீக் பற்றிய கதை இது. மிஸ்டர் ஸீரோ டாலரன்ஸ் மக்கற் மற்றும் ஊடகங்களுடன் பிரபலமாக உள்ளார். தீவிர வலதுசாரிக் கட்சியான வி.வி.வி.யில் இணைவதற்கு தேர்தலுக்கு முன்பே அவர் போலிஸ் அதிகாரத்தை விட்டு வெளியேறி வருகிறார் என்று அறிவிக்கும்போது நாட்டை குழப்பத்தில் ஆழ்த்திவிடுகிறார். ஒரு போலீஸ்காரர் என்றமுறையில் கடைசி நாளன்று, சார்லொரோவுக்கு அவரை அழைத்துச்சென்று விசாரணையை அவர் வழிநடத்துகிறார், அங்கு போதை மருந்து ஆய்வில் ஒரு சோதனை நடத்துகையில், எதிர்பாராத மற்றும் மரண நிகழ்வுகளின் தொடர்ச்சியாக அமைகிறது.

பிற்பகல் 2.00 மணி | CORPORATE | DIR: Nicolas Silhol| FRANCE / FRENCH / ENGLISH | 2017 | 95'

எமிலி, எசென் என்ற பன்னாட்டு நிறுவனமொன்றில் மனித வள பிரிவில் வேலை பார்க்கிறாள். அவளது நேர்த்தியான அதேசமயம் இரக்கமற்ற அணுகுமுறையின் காரணமாக, அவாளது உயரதிகாரி ஸ்டீஃபனால் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவள். தேவைப்படாத பணியாளர்களை தாமாகவே பணியிலிருந்து வெளியேற செய்யும் திறன் அவளுக்கிருந்தது. எந்த தார்மீக சிந்தனையும் இன்றி இதை செய்து வருகிறாள். அப்படி ஒரு நாள் வேலையில், டல்மாட் என்பவர் அலுவலகத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். இது எமிலியை கடுமையாக பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அந்த பன்னாட்டு நிறுவனம், அவள் மீதே மொத்த பழியையும் சுமத்தி விட நினைக்கிறது.

மாலை 4.30 மணி | A DAY AFTER / GEU-HU | DIR: SANG-SOO HONG | KOREAN | 2017 | 92'

சியோலில் ஒரு சிறிய பதிப்பகம் ஒன்றை நடத்தி வரும் போங்வான், அன்று சீக்கிரமாக எழுந்துகொள்கிறார். அதிகாலையில் மிகவும் சீக்கிரம் அவர் எழுந்து கொண்டதற்கு என்ன காரணம்? அவரது மனைவி அவரை கேள்விக்கணைகளால் தொடுக்கிறார். ஆனால் போங்வான் மேலோட்டமான பதில்களையே தருகிறார். அவர் வேலைக்காகவும், விடியாத இருட்டில் தெருக்களில் நடந்து செல்லும் சமயத்திலும், ஒரு மாதத்திற்கு முன் வேலையைவிட்டுச் சென்ற பெண்ணைப் பற்றியே சிந்திக்கிறார். அதன்பிறகு தனது அலுவலகத்தில் அவர் ஏரியூம் என்ற தனது புதிய செகரெட்டரியைச் சந்திக்கிறார். அவள் மிகவும் அழகான இளம் பெண். தனது முதல் நாள் வேலையை அப் பெண் எடுத்துக்கொள்கிறார். இதற்கிடையில் வீட்டில் மனைவி தனது கணவன் எழுதிய காதல் கவிதையைக் கண்டுபிடிக்கிறார். முகம் சிவக்க அதே வேகத்தோடு பதிப்பக அலுவலகத்திற்கு வந்து சண்டை போடுகிறார். அவரது கணவரின் செகரட்டரியை தாக்குகிறார்

பிற்பகல் 7.00 மணி | END OF SEASON | DIR: LARS HENNING | GERMAN | 2017 | 97'

பெக்கர், ஜெர்மனியின் முன்னாள் குற்றவாளி, இரவு நேர காவலாளி வேலையில் ஒழுக்கமாக இருந்து வருகிறான். ஆனால், 18 வருடங்களுக்கு முன்னால் பெக்கர் கொன்ற ஒருவனின் குடும்பத்தை அவன் சந்திக்க நேரிடும்போது, அவனது வாழ்க்கை கட்டுப்பாட்டை மீறி சுழல ஆரம்பிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x