Published : 13 Dec 2017 05:02 PM
Last Updated : 13 Dec 2017 05:02 PM

சென்னை பட விழா | தேவிபாலா | டிசம்.14 | படக்குறிப்புகள்

சென்னை 15-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை (டிசம்.14) தேவிபாலா திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 11.15 மணி | MANJAN / MANJAN | DIR: RAHMAN SEYFI AZAD | PERSIAN | 2017 | 100'

மொலாட் மற்றும் ஹாஷெம் அவர்களின் நோயுற்ற மகனை வைத்திருக்க வேண்டும் என்பதில் வாதம் உருவாகிறது. மொலாட் அவர்களின் மகனை பலம் குன்றிய நுரையீரல் உடையோர் நலனுக்கான மருத்துவ இல்லத்துக்கு அனுப்பி வைப்பதற்கு ஹாஷெம் எதிர்க்கிறான். ஷாஹெம் அவளை விவாகரத்து செய்வதென முடிவெடுப்பதற்கு இயலாமல் குழந்தையை வைத்துக்கொள்ளச் சொல்லி

மொலாட் கடும் நெருக்கடியைத் தருகிறாள். ஹாஷெம் மறுமணம் புரிந்துகொள்ள விரும்பி இரண்டாவது மனைவியிடம் பேசுகிறான். ஆனால் அப்பெண்ணோ குழந்தையை பார்த்துக்கொள்ள முடியாது எனக் கூறுகிறாள். இதனால் மனநிலை உடைந்த ஹாஷெம் வேலையை விடும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

பிற்பகல் 2.15 மணி | BLOODY MILK / PETIT PAYASAN | DIR: HUBERT CHARUEL | FRENCH | 2017 |90'

பியர், ஒரு முப்பத்தி ஐந்து வயதான விவசாயி, அவரது பெற்றோர் நடத்திக்கொண்டிருந்த பால்பண்ணையை எடுத்து நடத்துகிறார். ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரம் அவரது பசுக்களுடன்தன் தன் நேரத்தை அர்ப்பணிக்கிறார். திடீரென ஒரு தொற்றுநோயினால் மாடுகள் தாக்கப்பட்டுவிட்ட்தாக உணர்கிறார். மந்தை முழுவதுமே அவருக்கு அச்சுறுத்தலைத் தருகின்றன. இதனால் மனக்கவலையோடு அவற்றை கவனிக்கத் தொடங்குகிறார். அவரது சகோதரி பாஸ்கேல், கால்நடை மருத்துவரான அவரது சகோதரி பாஸ்கேல், ''எல்லா மாடுகளும் நன்றாகவே உள்ளன. தேவையற்ற கவலைகளை விட்டுவிடு'' என ஆறுதல் அளிக்கிறார். துரதிஷ்டவசமாக, ஒரு மாடு தொற்றில் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. பியருக்கு இந்த அச்சம் மேலும் அதிர்ச்சியையே ஏற்படுத்துகிறது. ஏனெனில் ஒரு மாட்டுக்கு தொற்றுநோய் வந்தாலும் மொத்த மந்தையையும் வெட்ட வேண்டும். ஆனால் பியர் பிரச்சனையை, அதுவரை போகவிடவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x