ஆர்கே படத்துக்காக 12 வகை நாய்கள்

ஆர்கே படத்துக்காக 12 வகை நாய்கள்

Published on

சென்னை: ‘எல்லாம் அவன் செயல்’, ‘அழகர்மலை’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’, ‘அவன் இவன்’ உட்பட பல படங்களில் நடித்தவர் ஆர்கே. இவர் இப்போது ஹீரோவாக நடிக்கும் படத்தை ஆர்.கண்ணன் இயக்குகிறார். இதில் மால்வி மல்ஹோத்ரா, அபிராமி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கியது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் இப்போது நடந்து வருகிறது.

இதில் நாய்கள் பராமரிப்பாளராக ஆர்கே நடிப்பதால் படத்தில் 12 வகையான நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கானப் பயிற்சியாளர்களுடன் நாய்கள் பங்குபெறும் காட்சிகளை இப்போது படமாக்கி வருகின்றனர். படப்பிடிப்பில் இந்த நாய்களுக்காகச் சிறப்பு ஏசி அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படம், மலையாளத்தில் திலீப் நடித்து வெளியான ‘ரிங் மாஸ்டர்’ படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in