Published : 19 Dec 2017 05:19 PM
Last Updated : 19 Dec 2017 05:19 PM

சென்னை பட விழா | தாகூர் திரைப்பட மையம் | டிசம்.20 | படக்குறிப்புகள்

சென்னை 15-வது சர்வதேச பட விழாவில் புதன்கிழமை (டிசம்.20) தாகூர் திரைப்பட மையத்தில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

 

காலை 11.15 மணி | CRACKS IN THE SHELL/ DIE UNSICHTBARE | DIR: CHRISTIAN SCHWOCHOW | GERMAN / DANISH / CHINESE| 2011 | 133'

ஃபைன் திறமையான நடிப்பு மாணவி. ஆனால் கூச்சமுடையவள். ஆனால் மனநலம் பாதிக்கப்பட்ட தனது சகோதரி ஜூலை பார்த்துக் கொள்ள, அவளை தூங்க வைக்க பாடுவது, ஆடுவது, நடிப்பது என தனது திறமைகளை பயன்படுத்துகிறாள். ஆனால் பள்ளியிலோ அவள் தன்னம்பிக்கியின்றி இருக்கிறாள். புகழ்பெற்ற இயக்குநர் காஸ்பெர் ஃபீர்ட்மென் தனது அடுத்த படத்துக்கான நடிகர் தேர்வை வைக்கிறார். ஃபைன் தனது திறமையால் அவரை ஈர்க்கிறாள். ஃபைனின் பாதிக்கப்பட்ட ஆளுமையும், குணமும், தனது அடுத்த படைப்பின் மைய கதாபாத்திரத்தைப் போலவே இருப்பதாக காஸ்பர் நினைக்கிறார். ஃபைனுக்கு அந்த பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், ஃபைன் நடிப்புக்காக தனது அடையாளத்தையே இழந்து அந்த பாத்திரமாகவே மாறுகிறாள். இது அவளது சகோதரியை பார்த்துக் கொள்வதிலும் எதிரொலிக்கிறது. இந்த ஆபத்தான விளையாட்டில் ஃபைனுக்கு, ஃபைனே எதிரியாக மாறுகிறாள்.

 

பகல் 2.15 மணி |THE DRESSMAKER / DIE SCHNEIDERIN | DIR: JOCELYN MOORHOUSE | AUSTRALIA / ENGLISH | 2017 |85'

ஆஸ்திரேலியாவில் இருக்கும் தனது சிறிய கிராமத்துக்கு திரும்புகிறாள் கவர்ச்சிகரமான பெண்ணொருத்தி. அங்கு, தனது தையல் இயந்திரத்தின் உதவியுடனும், உயர்தர ஃபேஷன் ரசனையுடனும், அந்த கிராமத்து பெண்களை மொத்தமாக மாற்றுகிறாள். அதோடு, தனக்கு தீங்கிழைத்தவர்களை பழியும் தீர்த்துக்கொள்கிறாள்.

 

மாலை 4.45 மணி | THE TOWER / DER TURM | DIR: CHRISTIAN SCHWOCHOW | GERMAN | 2012 | 180'

கிழக்கு ஜெர்மனி கம்யூனிஸ்ட் ஆட்சியின் இறுதி காலத்தில் நடக்கும் கதை. 1982. அடக்குமுறை அரசில் விரிசல் விழ ஆரம்பிக்கிறது. அடக்குமுறைகளையும் மீறி படித்தவர்கள் சிலர், அதே அமைப்பில் கூடுதல் சலுகைகளை பெறுகிறார்கள். ஹாஃப்மேன் குடும்பத்தினர் அந்தஸ்து மிக்கவர்களுடன், அரசியல் வாதிகளுடன், இசை, கேளிக்கைகளுடன் விருந்துக்காக அடிக்கடி கூடுகின்றனர். ரிச்சர்ட் தனக்கென பல கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்தாலும் அவன் தனது இரண்டாவது வாழ்க்கையை பற்றி ரகசியங்களை மறைத்து வைத்திருக்கிறான். பயமும், நம்பிக்கையின்மையும் அதிகரிக்கும் சூழலில், ரகசிய போலீஸ் நிழலாக பின் தொடர, எடுக்கப்படும் முடிவுகளால் வரும் விளைவுகள் பேரழிவுக்கு வித்திடுமா?

 

மாலை 7.15 மணி | KILLS ON WHEELS / PLATEIAMARIKIS | DIR: ATTILA TILL | HUNGARIAN | 2016 | 103'

சக்கர நாற்காலியில் இருந்துகொண்டே கொலைகளை செய்யும் கொலையாளி கும்பலைப் பற்றிய ஆக்ஷன் காமெடி படம் ஆகும். தன்னால் எந்தப் பயனும் இல்லை என்ற விரக்தியடைந்த 20 வயது இளைஞன், அவனது நண்பர் மற்றும் முன்னாள் துப்பாக்கி சுடும்வீரர் ஆகியோர் சேர்ந்து மாஃபியா கும்பல் ஒன்றிற்கு தங்கள் சேவைகளை வழங்குகிறார்கள். ஆனால் அவை என்னவென்று தெரியவில்லை. உண்மைக்கும் கற்பனைக்கும் இடையே உள்ள எல்லைகள், தெளிவற்ற சம்பவங்களும் கதையும் ஒரு கலைடாஸ்கோப்பாக சுழற்றி காட்டப்படுகிறது. மாபியா கும்பல்களும் துப்பாக்கிச் சண்டைகளுமாக தொடரும் கதையில் சக்கர நாற்காலி வாழ்க்கை சவாலாக உள்ளது. தந்தை நிராகரித்ததால் அந்த சக்கர நாற்காலி இளைஞர்களின் வாழ்க்கை வலியும் கொண்டதாக அமைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x