நியூயார்க் இந்திய தின விழாவில் சமந்தா

நியூயார்க் இந்திய தின விழாவில் சமந்தா
Updated on
1 min read

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த இந்திய தின விழாவில் நடிகை சமந்தா கலந்துகொண்டார்.

நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் இருந்து தனது அம்மாவுடன் அமெரிக்கா சென்றார். அங்கு நியூயார்க் நகரில் நடக்கும் 41வது இந்திய தின விழாவில் கலந்துகொள்ள ஏற்கெனவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த அணிவகுப்பில் கலந்துகொண்டார். ஆன்மிக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா், நடிகை ஜாக்குலின் ஃபொ்னாண்டஸ் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

அங்கு கலந்துகொண்ட இந்தியர்கள் மத்தியில் சமந்தா பேசும்போது, “நம் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் எவ்வளவு சிறப்பானது என்பதை நீங்கள் உணர்த்தியுள்ளீர்கள். இன்று நான் பார்த்தது என் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். தொடர்ந்து என் படங்களுக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. என் ஒவ்வொரு படத்தையும் உங்கள் படம் போலவேஆதரித்தமைக்கு நன்றி. செப். 1-ம் தேதி நான் நடித்துள்ள ‘குஷி’ வருகிறது. அதையும் பாருங்கள்’’ என்றார்.

அமெரிக்காவில் இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக நியூயார்க், நியூஜொ்சி மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சோ்ந்த இந்தியா சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்ஐஏ), இந்திய தின அணிவகுப்பை ஒவ்வொரு வருடமும் நடத்துகிறது. கடந்த வருடம் அல்லு அர்ஜுன் கலந்துகொண்டார்.

சிகிச்சை: இதற்கிடையே நடிகை சமந்தா தசை அழற்சி நோய்க்காக சில மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் ஒரு வருடம் சினிமாவில் இருந்து விலகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in