Published : 17 Dec 2017 06:32 PM
Last Updated : 17 Dec 2017 06:32 PM

சென்னை பட விழா | ரஷிய கலாச்சார மையம் | டிசம்.18 | படக்குறிப்புகள்

சென்னை 15-வது சர்வதேச பட விழாவில் திங்கள்கிழமை (டிசம்.18) ரஷிய கலாச்சார மையத்தில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 10:30 மணி | IDAK | DIR: DEEPAK GAWADE | MARATHI |2017 | 107'

ஓர் ஏமாற்றுக்காரனான நம்யா யாத்திரை செல்லும்போது ஒரு திருப்பம் ஏற்படுகிறது. அவனது தாயார் தனது கனவில் தேவி தோன்றி கனக்கு ஒரு ஆடு பலி கொடுத்தால்தான் உன் மகனின் வாழ்க்கையில் நல்லது ஏற்படும் என்று கூறியதாகக் கூறுகிறார். அதன்படி அதை நிறைவேற்றுவதிலும் அவர் உறுதியாக இருக்கிறார். தன் அம்மா சொன்னபடி நம்யா சிக்கல்மிக்க ஒரு ஆட்டை கண்டுபிடித்துக்கொண்டுவருகிறார். ஆடு பலிகொடுக்கப்பட வேண்டிய நாள் வரும்போது அம்மாவுக்கு கொடுத்த வாக்குக்கும் தனக்கு மிகவும் நண்பனைப்போல உள்ள ஆடுக்கும் நடுவே, நம்யா தனக்குள் ஒரு போராட்டம் நடப்பதை உணர்கிறான்.

பகல் 12.30 மணி |VILLAGE ROCKSTARS | DIR: RIMA DAS | ASSAMESE |2017 | 87'

நகரத்திற்கு வெகுதொலைவில் ஒரு கிராமம். தந்தையற்ற சூழலில் தாயின் அரவணைப்பில் வளர்கிறாள் 10 வயது துனூ என்ற சிறுமி. வீட்டில் வறுமை சூழ்நிலை. இப்படத்தில் அழகான மழைஈரம்மிக்க கிராமத்தை காட்டியிருக்கிறார்கள். மழைவெள்ளம் வரும்போதெல்லாம் அவளுக்கு தந்தையின் நினைவுதான். அவளுடைய கனவுகளோ பெரியது. அதன்மீது உறுதியான நம்பிக்கைகளும் அவளுக்கு உண்டு. இசையின்மீது அவளுக்கு ஆர்வம் அதிகம். கிதார் போன்று வடிவமைக்கப்பட்ட அட்டையை எடுத்துக்கொண்டு சுற்றிவருவதில் தனி சுகம். எந்த மற்ற ஆண் சிறுவர்களோடு விளையாடுவதில் அவளுக்கு எந்த பாலின பேதமும் இல்லை. ஆனால் சமூகமோ வீடோ அதற்கு இடம் கொடுக்க வில்லை. இச்சூழ்நிலையில் எதிர்பாராமல் அவள் பெரியவளாகிவிட வீட்டுக்குள் பெரும் கட்டுப்பாடுகள். அதன் பின்னர் ஒருநாள் பையன்கள் இசைக்கச்சேரி நடத்த இவளால் அதில் பங்கேற்க தடை. இருந்தாலும் மற்ற ஊர்மக்களோடு அமர்ந்து ஆர்வத்தோடு ரசிக்கிறாள்.

பிற்பகல் 3.00 மணி | KADUGU | DIR: VIJAY MILTON | TAMIL |2017 | 115'

புலி வேஷக் கலைஞரான ராஜ குமாரன், அக்கலை அழிந்துவருவதால் வறுமையில் வாடுகிறார். தரங்கம்பாடியில் காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்கும் வெங்கடேஷுக்கு உதவியாளராக அவருடன் செல்கிறார். அந்த ஊரில் தன்னால் முடிந்த அளவில் பிறருக்கு நன்மைகள் செய்து வருகிறார். பரத் அந்த ஊரில் வளரும் அரசியல்வாதி. இளைஞர்களிடை யில் செல்வாக்கு பெற்ற குத்துச் சண்டை வீரர். அந்த ஊருக்கு வரும் அமைச்சர் தவறான நட வடிக்கையில் ஈடுபடுகிறார். அந்தத் தவறின் விளைவுகள் என்ன, அதில் பரத்தின் பங்கு என்ன, ராஜகுமா ரனுக்கும் இதற்கும் என்ன தொடர்பு ஆகிய கேள்விகளுக்குப் பதிலாக விரிகிறது ‘கடுகு’ படத்தின் திரைக்கதை.

மாலை 6.00 மணி | CRY HUMANITY / MANUSANGADA | DIR: AMSHAN KUMAR | TAMIL |2017 | 140'

முக்கிய திரை விமர்சரும் ஆவணப்பட, திரைப்பட இயக்குநருமான அம்ஷன் குமாரின் புதிய திரைப்படம் இது. தமிழின் முக்கிய இலக்கியகர்த்தாக்களான அசோகமித்திரன், ஞானக்கூத்தன் ஆகியோரைப் பற்றி இவர் இயக்கிய ஆவணப்படங்கள் முக்கியமானவை. தவிர, கரிசல் எழுத்தாளர் கி.ரா.வின் சிறுகதையான 'கிடை'யை அடிப்படையாகக் கொண்டு இவர் இயக்கிய 'ஒருத்தி' திரைப்படம், புதுடெல்லி சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 2017ல் அம்ஷன் குமார் இயக்கியுள்ள 'மனுஷங்கடா' எனும் இத் திரைப்படம் எவ்வளவோ அறிவியல் சமுதாய முன்னேற்றங்கள் வந்தபிறகும் இன்னமும் தீண்டாமை கொடுமை நிலவி வரும் சூழலை ஆராய்கிறது. மும்பை சர்வதேச திரைப்படவிழாவில் திரையிட தேர்வான ஒரே தமிழ்த் திரைப்படம் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x