Published : 14 Dec 2017 04:17 PM
Last Updated : 14 Dec 2017 04:17 PM

சென்னை பட விழா | தாகூர் திரைப்பட மையம் | டிசம்.15 | படக்குறிப்புகள்

சென்னை 15-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை (டிசம்.15) தாகூர் திரைப்பட மையத்தில் திரையிடப்படும் படங்களின் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 11.15 மணி | THE CHARMER / CHAMOREN | DIR: MILAD ALAMI | DENMARK / DANISH / PERSIAN | 2017 |100'

இஸ்மாயில், இளம் ஈரானிய இளைஞன், டென்மார்கில் தான் நிலையாக தங்குவதற்கு ஒரு பெண்ணின் உதவியை நாடுகிறான். அந்த சந்திப்பு தள்ளிப்போக, இஸ்மாயில் காதலில் விழ, கடந்த கால பிரச்சினை ஒன்றும் சேர்ந்து அவனை துரத்துகிறது.

பிற்பகல் 2.15 மணி | HOME / DOM | DIR: FIEN TROCH | BELGIUM / FLEMISH / DUTCH| 2017 |103'

இரண்டு தலைமுறைகளுக்கு நடுவில் இருக்கும் சிக்கல். நம்பிக்கை, துரோகம், நட்பு என்ற மெல்லிய கோட்டுக்கு நடுவில் நடக்கும் விஷயங்கள் என்னென்ன? தவறு யார் பக்கம்? லீனா, ஒரு இளம் பெண் பிடிவாதமான முகம் கொண்டவள். பள்ளிக்கூட ஆசிரியர்களைப் பற்றி வதந்திகளைப் பரப்புபவள், ஜான், பள்ளி மேற்பார்வையாளரின் எச்சரிக்கைகளை பொருட்படுத்துவதேயில்லை. சம்மி, வீட்டு சமையலறை எக்ஸார்ட் பேன் அருகிலேயே நின்று புகைப்பவன். தனது தாயின் கண்டனங்களை காது கொடுத்தே கேட்பது இல்லை. கெவின், இவனை வீட்டிலேயே வைத்திருக்கமுடியாது, எங்காவது சீர்திருத்தப் பள்ளியில்தான் கொண்டுபோய்விட வேண்டும் என கைகழுவிட்டனர். தொலைக்காட்சி ஸ்மார்ட் போன், வீடியோ கேம்ஸ் என்று திரியும் பெற்றோர்கள் பேச்சை கேட்பதே இல்லை. இளம்பருவத்தினரின் நடத்தை சில நேரங்களில் அதிர்ச்சியைத் தருகிறது. இது பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான தொடர்பு இடைவெளியை மையமாகக் கொண்டது.

மாலை 4.45 மணி | BARRAGE / GAT | DIR: LAURA SCHROEDER | FRENCH | 2017 | 112'

10 வருடங்கள் வெளியூரில் கழித்த கேத்தரின், தனது மகள் ஆல்பாவுடன் இருக்க லக்ஸெம்பர்குக்கு திரும்புகிறாள். அவளை வளர்த்தது கேத்தரினின் அம்மா எலிசபெத். ஆனால் எலிசபெத் கேத்தரினை நிராகரிக்கிறாள். கேத்தரின் ஆல்பாவை கடத்தி, வடக்குப் பகுதியிலிருக்கும் ஒரு ஏரியை நோக்கி பயணப்படுகிறாள். அங்கு இயற்கையெழில் மிக்க சூழ்நிலையில் இருவரும் வலம் வருகிறார்கள். அதேநேரம் கேத்தரின் மகன் ஆல்பாவுக்கு தனது பாட்டியின் நினைவுகள் வரத்தான் செய்கின்றன.

மாலை 7.15 மணி | NO DATE NO SIGNATURE / NO DATE, NO SIGN | DIR: VAHID JALILVAND | PERSIAN | 2017 | 100'

தடயவியல் நிபுணர் டாக்டர். நரிமான் ஒரு கார் விபத்தில் சிக்குகிறார். அதில் எதிரில் மோட்டர் சைக்கிளில் வந்தவரின் 8 வயது மகனுக்கும் அடிபடுகிறது. அவனை சிகிச்சைக்கு அழைத்து செல்ல கேட்டாலும், அவன் தந்தை மறுக்கிறார். அடுத்தநாள், அந்த சிறுவன் மர்மமான முறையில் இறந்து விட்டதாகவும், பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவரது மருத்துவமனையில் தெரிவிக்கப்படுகிறது. அந்த சிறுவனின் மரணத்துக்கு யார்காரணம். குழந்தை இறந்த சோகத்தில் நரிமானை சந்தேகப்படுவதுடன் அவரை கேவலமாகப் பேசுகிறார் பெற்ற தந்தை. ஆனால் நடந்ததே வேறு. மற்ற டாக்டர்கள் டயக்னிசிஸ் செய்யும்போது நடந்த தவறுதான் அவன் இறக்கக் காரணம் என்பது தாமதமாக தெரியவருகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x