Published : 20 Dec 2017 05:02 PM
Last Updated : 20 Dec 2017 05:02 PM

சென்னை பட விழா | கேஸினோ | டிசம்.21 | படக்குறிப்புகள்

சென்னை 15-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை (டிசம்.21) கேஸினோ திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 9.45 மணி | THAT'S NOT ME | DIR: GREGORY ERDSTEIN | AUSTRALIA / USA / ENGLISH | 2017 |85'

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடிகையும் எழுத்தாளருமான ஆலிஸ் ஃபவுச்சர் நடித்துள்ள படம். இதில் அவர் ஒரே மாதிரியாக உள்ள இரட்டைச் சகோதரிகளாக நடித்துள்ளார். ஆமி, பாலி இரண்டு கதாபாத்திரங்கள். ஆமி ஒரு முக்கியப் பாத்திரம். ஒரு சினிமா நடிகையாக வருகிறார். இன்னொருவர் பாலி ஒரு சாக்லேட் பாரில் பணிபுரிகிறவர். தன்னைப் போலவே இருக்கும் ஆமி பெரிய நடிகையாக உள்ளாரே என இவருக்கு பொறாமை. ஒரு கட்டத்தில் தனது அதிஷ்டத்தை நம்பி அவர் ஹாலிவுட்டிற்கு கிளம்பிவிடுகிறார். அவரது முயற்சிகள் வியக்கத்தக்க விளைவுகளைத் தருகிறது. இரட்டைக் கதாப்பாத்திரங்கள் ஏற்று நடித்த நடிகை ஆலீஸ் ஃபவுச்சர் இப்படத்திற்கான கதை திரைக்கதையை எழுதியுள்ளார். அவரது கணவர் கிரிகோரி எர்ட்ஸ்டீன் இயக்கியுள்ளார்.

பகல் 12.15 மணி | THE ARTIST: REBORN / ATISEUTEU: DASHI TAEEONADA | DIR: KIM KYOUNG-WON | KOREAN | 2017 | 95'

ஜிசெல்லே எனும் பெண், டென்மார்க்கில் கிழக்காசிய ஓவிய பாணியைப் பயின்ற ஒரு கலைஞர். கலைப்பயிற்சி நிறைவடைநது டென்மார்க்கிலிருந்து தென்கொரியாவிற்கு அவர் திரும்பி வருகிறார். தென் கொரியாவில் தனது முதல் கண்காட்சியை நடத்த ஜிசெல்லே முயற்சிக்கிறார், ஆனால் அதை அவரே அதை நிராகரித்து விடுகிறார். கண்காட்சியை நடத்தும் கேலரி தலைமை நிர்வாகி ஜேயி-பம்மை எதிர்பாராமல் அதிஷ்டவசமாக சந்திக்கிறார். ஜேயி-பம் உதவியுடன் தனது கண்காட்சியை வைக்கமுடியும் என நம்பிக்கை கொள்கிறார். ஆனால் அவரது திடீரென இதயம் செயலிழக்கத் தொடங்குகிறது. ஜீசெல்லேவின் ஓவியங்கள் மிகப் பெரிய புகழை அடைகின்றன. ஜீசெல்லே எனும் இந்தப் பெண் ஓவியக் கலைஞருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கிறது. ஒரு ஓவியராக ஜீசெல்லேவை அதன்பிறகு காணாமல் போகிறார். ஓவியக் கலைஞரின் விருப்பத்தை கேலரியின் தலைமை நிர்வாகி ஜேயி-பம் நிறைவேற்ற திட்டமிட ஜீசெல்லே எழுந்துவந்து அவர்முன் தோன்றுகிறார்.

பிற்பகல் 2.45 மணி | AFTER THE WAR | DIR: ANNARITA ZAMBRANO | FRANCE /ITALY / BELGIUM / SWITZERLAND | ITALIAN 2017 | 92'

போலோக்னா 2002. தொழிலாளர் சட்டத்துக்கான எதிர்ப்பு பல்கலைக்கழகங்களில் வெடிக்கிறது. ஒரு நீதிபதியின் கொலை, இத்தாலிக்கும் பிரான்ஸுக்கும் நடுவில் இருக்கும் பழைய அரசியல் பகையை மீண்டும் கிளறுகிறது. மார்கோ, முன்னாள் இடது சாரி ஆர்வலர், கொலை குற்றவாளியாக தண்டனை அளிக்கப்பட்டு, 20 வருடங்கள் ஃபிரான்ஸில் நாடு கடத்தப்பட்டவர். புதிய கொள்கை ஒன்றினால், இத்தாலிய அரசாங்கம் அவரை இத்தாலியில் வந்து சரணடையவைக்க பிரான்ஸை கேட்கிறது. தனது 16 வயது மகள் வயோலாவுடன் வேறு வழியில்லாமல் தப்பித்து ஓடும் அவரது வாழ்க்கை மொத்தமாக மாறுகிறது. மார்கோவின் கடந்த கால தவறுகளால் பாதிக்கப்பாடும், இத்தாலியில் இருக்கும் அவரது குடும்பத்தின் வாழ்க்கையும் மாறுகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x