அஸ்வின் மற்றும் ரஜினிகாந்த்
அஸ்வின் மற்றும் ரஜினிகாந்த்

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படம் குறித்து ட்வீட் செய்த அஸ்வின்

Published on

சென்னை: கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படம் குறித்து ட்வீட் செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்தியா முறையில் வெளியாகி உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் வசூல் ரூ.200 கோடியை கடந்துள்ளதாக தகவல்.

இந்த சூழலில் ஜெயிலர் படம் குறித்து அஸ்வின் ட்வீட் செய்துள்ளார். “எவர்கிரீன் ரஜினிகாந்தின் ஸ்க்ரீமர் தான் ஜெயிலர்” என ட்வீட் செய்துள்ளார். இதனுடன் தலைவர் அலப்பறை, தலைவர் நிரந்தரம் என ஹாஷ்டேகையும் பதிவிட்டுள்ளார். இது படத்துக்கு அவர் கொடுத்துள்ள ரிவ்யூ போல அமைந்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in