மீண்டும் தொடங்கியது ‘கல்கி 2898 ஏடி’ படப்பிடிப்பு: கமல் கலந்துகொள்வாரா?

மீண்டும் தொடங்கியது ‘கல்கி 2898 ஏடி’ படப்பிடிப்பு: கமல் கலந்துகொள்வாரா?
Updated on
1 min read

ஹைதராபாத்: நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகாபடுகோன், திஷா பதானி, பசுபதி நடிக்கும் படம் ‘கல்கி 2898 ஏடி’. மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. பான் இந்தியா முறையில் உருவாகும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமான இதை வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கிறது.

அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் நடைபெற்ற காமிக் கான் நிகழ்ச்சியில் இப்படத்தின் தலைப்பு மற்றும் க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் நிறுத்தப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு இப்போது ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. வரும் 28-ம் தேதி வரை இங்கு படப்பிடிப்பு நடக்க உள்ளது. நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் இருப்பதால் இன்னும் சென்னை திரும்பவில்லை. அவர் வந்த பிறகு, இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in