‘தி எக்ஸார்சிஸ்ட்’ இயக்குநர் வில்லியம் ஃபிரைட்கின் காலமானார்

‘தி எக்ஸார்சிஸ்ட்’ இயக்குநர் வில்லியம் ஃபிரைட்கின் காலமானார்

Published on

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் இயக்குநர் வில்லியம் ஃபிரைட்கின் (87). தி பிரெஞ்ச் கனெக்‌ஷன், தி எக்ஸார்சிஸ்ட், தி பாய்ஸ் இன் த பேண்ட், டு லிவ் அண்ட் டை இன் எல்ஏ, கில்லர் ஜோ உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவர், இப்போது ‘தி கெய்ன் முடினி கோர்ட் -மார்ஷியல்’ (The Caine Mutiny Court-Martial) என்ற படத்தை இயக்கி உள்ளார். இது, அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இது தவிர ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த இவர், பல்வேறு உடல் உபாதைகளால் கடந்த சில வருடங்களாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் உயிரிழந்துவிட்டதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in