Last Updated : 02 Nov, 2017 06:18 PM

 

Published : 02 Nov 2017 06:18 PM
Last Updated : 02 Nov 2017 06:18 PM

நவம்பர் 20-ல் ராம் கோபால் வர்மா - நாகார்ஜுனா படப்பிடிப்பு தொடக்கம்

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நாகார்ஜுனா நடிப்பில் உருவாகவுள்ள படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 20-ம் தேதி தொடங்கவுள்ளது.

ராம் கோபால் வர்மா - நாகார்ஜுனா இணைப்பில் வெளியான படம் 'சிவா'. 1989-ம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், அதனைத் தொடர்ந்து இருவரும் இணைந்து படம் பண்ணவில்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இருவரும் இணைந்து படம் பண்ணவிருக்கிறார்கள். நவம்பர் 20-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அன்றைய தினம் இதர படக்குழுவினர் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

இது குறித்து ராம் கோபால் வர்மா கூறியிருப்பதாவது:

நாகார்ஜுனாவுடன் எனது புதிய படத்தை நவம்பர் 20-ம் தேதி, 'சிவா' (தெலுங்கு) படத்தைத் தொடங்கிய அதே அன்னபூர்ணா ஸ்டூடியோவில் தொடங்க இருக்கிறேன்.. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், அதுகுறித்து கொஞ்சம் உணர்ச்சிமயமாகத்தான் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x