

சென்னை: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ வரும் 10-ம் தேதி வெளியாகிறது. இதையடுத்து, தா.செ.ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கிறார், ரஜினிகாந்த்.லைகா புரொடக் ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் ரஜினிகாந்துடன் அமிதாப்பச்சனும் இணைந்து நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்தப் படத்தில், மஞ்சு வாரியர் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதாகவும் ஃபஹத் ஃபாசில், தெலுங்கு நடிகர் நானி முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.