Published : 11 Nov 2017 09:06 AM
Last Updated : 11 Nov 2017 09:06 AM

அப்பாவின் சினிமா கடந்த தேடல்தான் பிடிக்கிறது: நடிகர் கார்த்தி நேர்காணல்

பெரும்பாலும் நாம எல்லோரும் 8 மணி நேர அலுவலகப் பணியை முடித்துவிட்டு சொந்த வாழ்க்கைக்குள் வந்துவிடுவோம். ஆனால், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சில நாள் பயிற்சிக்காகச் சென்ற சில இடங்களில் தினமும் 22 மணி நேரம் பணியாற்றும் காவல் துறை அதிகாரிகளைச் சந்தித்தேன். நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கான தேவை இங்கு அதிகம். சமூகத்தில் எதிரிகளை எதிர்கொள்கிற சவால்களைக் கடந்து ஒவ்வொரு காவல்துறை அதிகாரிக்கும் பல பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை எனக்கு உணர்த்தியது இந்தப் படம். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்காக முழுக்க ஆக்‌ஷன் களத்தில் அதிரடி காட்டியிருப்பதோடு, போலீஸ் அதிகாரியாக வாழவும் செய்திருக்கிறார் கார்த்தி. தொடர்ந்து அவரிடம் பேசியதில் இருந்து..

கார்த்தி - ‘சதுரங்க வேட்டை’ வினோத் கூட்டணி எப்படி அமைந்தது?

சதுரங்க வேட்டை படத்தில் இயக்குநர் வினோத் சமூகம் சார்ந்த பல விஷயங்களை வாழ்க்கையோடு கலந்து பேசியிருப்பார். ஒவ்வொரு வசனம், நடவடிக்கையும் அதையே பிரதிபலிக்கும். அதுபோன்ற உணர்வுகளை திரைக்கதையில் கொண்டு வருவது சற்று 11ChREL_Karthi-1 கடினமான வேலைதான். உண்மையை மையமாக வைத்த ஆக்ஷன் படம் என்று இக்கதையை அவர் சொல்ல வந்தார். உண்மை சம்பவத்தை திரைக்கதையாக்கும்போது சவால்கள் அதிகம். ஏற்கெனவே மணிரத்னம் சாரிடம் நான் உதவி இயக்குநராக இருந்தபோது அதுபோன்ற கதையை கலந்து பேசிய அனுபவம் உண்டு. ஆனால், இந்தக் கதை போலீஸ் அதிகாரியின் கேரியரை கடந்து எப்போதும்போல முறுக்கு மீசை இல்லாமல், பல இடங்களில் யூனிஃபார்ம் இல்லாமல், சில இடங்களில் தேடல் இல்லாமல்கூட ஒரு காவல்துறை அதிகாரி வாழ்க்கையாக இருந்தது. இந்த புதுமை என்னை ஈர்த்தது.

அண்ணன் துரைசிங்கம் (சூர்யா) பல பாகங்களில் அசத்திய கதாபாத்திரம் இது. தீரனாக அவரில் இருந்து என்ன வித்தியாசம் காட்ட முடிந்தது?

துரைசிங்கம் யாரையும் திட்டலாம், அடிக்கலாம். ‘தீரன்’ அப்படியல்ல. இது உண்மைக் கதை. ஒவ்வொரு விஷயத்தையும் எதிர்கொள்ளும் விதம் வேறு கோணத்தில் இருக்கும். ஒரு காவல்துறை அதிகாரிக்கு இங்கு எந்தத் தடையும் இல்லை. அவர் நினைத்தால் எதையும் உடைக்க முடியும் என்பதை என் கதாபாத்திரத்தில் உணர்ந்தேன். இந்த சமூகத்துக்கு பல கேள்விகளை முன்வைக்கும் களம் இது.

படம் முழுக்க ஆர்கானிக் ஆடைகளைப் பயன்படுத்தி இருக் கிறீர்களே?

அதற்கு என் அம்மாதான் காரணம். ஒருமுறை உடைகள் வாங்க கடைக்குப் போனபோது, சென்னையில் உள்ள ஆர்கானிக் காட்டன் கடை பற்றி சொன்னாங்க. நம்ம ஊரில் பிறந்து, நாம தயாரிக்கும் ஆர்கானிக் உடைகளை அணிந்து ஒரு படத்தில் நடித்தால் என்ன என்று தோன்றியது. அந்த நல்ல நோக்கத்தை இப்படத்தில் செயல்படுத்தி இருக்கிறோம்.

ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங் என்ன சொல்றாங்க?

அவங்க கதாபாத்திரம்தான் படத்துக்கு ரொம்ப ரிலீஃபா இருக்கும். போலீஸ் ஆபீஸர் மனைவியாக நடித்தாலும் கொஞ்சம்கூட இத்துறையின் ஆபத்துகள் பற்றி கவலை இல்லாத பாத்திரம். அவங்களுக்கும், எனக்குமான பகுதிகளை ரொம்பவே அழகழகான உரையாடல்களால் இயக்குநர் நிரப்பியிருப்பார்.

ஒரு படம் லோக்கல் பையன், அடுத்த படம் அழுத்தமான களம் என்று மாறி மாறி வருவது ஏன்?

அப்படி எந்த திட்டமிடலும் இருந்ததில்லை. கதை பிடித்தால், படப்பிடிப்புக்கு கிளம்பிவிடுவேன். என் முதல் படம் அழுத்தமான களமாக அமைந்ததால் தொடர்ந்து ரசிகர்கள் அப்படி எதிர்பார்க்கிறார்கள். ‘மெட்ராஸ்’ எனக்காக எழுதப்பட்ட கதை இல்லை. கதை பிடித்ததால் நடித்தேன். ‘சிறுத்தை’ மாதிரி படங்களில் மீண்டும் நடிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். ‘காஸ்மோரா’வில் நடிக்க நிறைய ஸ்கோப் இருந்தது. ஏற்றேன். சமீபத்தில் ‘தங்கல்’ பார்த்தபோது அப்படி ஒரு படம் நடிக்கணுமேன்னு ஆசையாக இருந்தது. பொழுதுபோக்கு மட்டுமல்லாது, வித்தியாசமான முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்று நினைப்பவன் நான்.

11ChREL_Karthi-2 ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங். படிப்பு, எழுத்து, பேச்சு என்று அப்பா சிவகுமார் மாறிவிட்டாரே. அவர் மீண்டும் நடிக்க வரவேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இல்லையா?

இல்லவே இல்லை. அவரது தற்போதைய தேடல் எனக்கு.. எங்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. சினிமாவை கடந்து ஒரு வாழ்க்கை இருக்கு என்பதை அப்பாதான் உணர்த்துகிறார். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை அவரிடம் இருந்துதான் பயின்று வருகிறேன். அண்ணன் சூர்யா மகள் தியா இப்போது மகாபாரதம் படிக்கிறார். அதற்கு அப்பாதான் காரணம். இந்த தலைமுறை அவ்வளவு எளிமையாக படிக்க ஒரு விஷயத்தை அப்பா உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து அதுசார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துகிறார். அதுதானே இப்போது வேண்டும்.

பிரபுதேவா, விஷால், கார்த்தி கூட்டணியில் தொடங்கிய ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படம் என்ன ஆனது?

கொஞ்சம் தள்ளிப்போகிறது. எல்லா விஷயங்களும் சரியாக அமையும்போதுதான் ஒரு படத்தோட வேலை நடக்கும். அது நல்ல சூழல் அமையும்போது நடக்கும்.

சூர்யா – கார்த்தி கூட்டணி படத்தை எப்போது எதிர்பார்க் கலாம்?

முதலில் அதற்கான கதை வேண்டும். அதற்கு முன்பு நாங்கள் இருவருமே பேசி வைத்துக்கொண்டு, கால்ஷீட்டைஃப்ரீயாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அதற்கும் சரியான சூழல் அமையும்போது பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x