நடிகர் கவினுக்கு ஆக.20-ல் திருமணம்

நடிகர் கவினுக்கு ஆக.20-ல் திருமணம்
Updated on
1 min read

சென்னை: ‘டாடா’ படம் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகர் கவின் தனது காதலியான மோனிகாவை ஆகஸ்ட் 20-ம் தேதி கரம்பிடிக்கிறார்.

தனியார் தொலைக்காட்சியில் வெளியான நெடுந்தொடர்கள் மூலம் நடிகராக அறிமுகமாவனர் கவின். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமடைந்தார். 2017-ல் வெளியான ‘சத்ரியன்’, 2019-ல் வெளியான ‘நட்புனா என்னான்னு தெரியுமா’ படங்களில் நடித்தவர் 2021-ல் ஓடிடியில் வெளியான ‘லிஃப்ட்’ படத்தின் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து அவரது நடிப்பில் இந்தாண்டு தொடக்கத்தில் திரையரங்குகளில் ரிலீஸான ‘டாடா’ பெரும் வெற்றிபெற்றதுடன் அவரது நடிப்பும் பாராட்டப்பட்டது. இந்நிலையில், நடிகர் கவின் தனியார் பள்ளியில் பணிபுரியும் தனது காதலியான மோனிகாவை ஆகஸ்ட் 20-ம் தேதி மணக்கிறார். ‘டாடா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவின் அடுத்ததாக நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in