Last Updated : 27 Nov, 2017 01:47 PM

 

Published : 27 Nov 2017 01:47 PM
Last Updated : 27 Nov 2017 01:47 PM

தீரன் படக்குழுவினருக்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு

கார்த்தி நடிப்பில் வெளியான 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், போஸ் வெங்கட், அபிமன்யு சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

பல்வேறு திரையுலகினரும் இப்படத்துக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். தற்போது 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் குறித்து இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

தீரன் அதிகாரம் ஒன்று - அதிரடியான போலீஸ் படம்..  நகம் கடித்து, இருக்கை நுனிக்கு வரவழைத்தது..  இயக்குநர் வினோத்தின் சிறந்த முயற்சியும், நுணுக்கமான விவரங்களுக்கும் வாழ்த்துகள்.. கார்த்தி, கிப்ரான், ஒளிப்பதிவாளர் மற்றும் மொத்த படக்குவினருக்கும் பாராட்டுகள்.

இவ்வாறு ஷங்கர் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x