Last Updated : 16 Nov, 2017 11:44 AM

 

Published : 16 Nov 2017 11:44 AM
Last Updated : 16 Nov 2017 11:44 AM

பொங்கல் விடுமுறைக்கு ஸ்கெட்ச் வெளியீடு: படக்குழு முடிவு

'ஸ்கெட்ச்' படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து பொங்கல் விடுமுறைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஸ்கெட்ச்'. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

எப்போது வெளியீடு என்று குழப்பம் நிலவிவந்த நிலையில், பொங்கல் விடுமுறையை கணக்கில் கொண்டு ஜனவரி 12-ல் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமன் இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 'ஸ்கெட்ச்' பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதால், 'சாமி 2' மற்றும் 'துருவ நட்சத்திரம்' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தவுள்ளார் விக்ரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x