Published : 25 Jul 2023 10:34 AM
Last Updated : 25 Jul 2023 10:34 AM

சிறுநீரக பாதிப்பில் இருந்து மீண்டேன்: நடிகை ஷெர்லின் சோப்ரா தகவல்

பிரபல இந்தி நடிகை ஷெர்லின் சோப்ரா. தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ள இவர், தமிழில் ‘யுனிவர்சிட்டி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இவர், சிறுநீரக பாதிப்பில் இருந்து மீண்டதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, “கடந்த 2021-ம் ஆண்டு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இறந்துவிடுவேன் என்று பயந்தேன். மருத்துவர்கள் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும்படி சொன்னார்கள். இல்லை என்றால் வாரத்தில் 3 முறை டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டும் என்றார்கள்.

என் குடும்பத்தினர் எனக்குச் சிறுநீரகம் தர மாட்டார்கள். டயாலிசிஸ் செய்துகொண்டு வாழும் வாழ்க்கையும் பிடிக்கவில்லை. பிறகு 3 மாதம் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டேன். என் சிறுநீரகம் சரியாகிவிட்டது. பிறகுதான் நிம்மதியாக உணர்ந்தேன். இப்போது நலமாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x