விஜய் ஆண்டனி இல்லாமல் ‘கொலை’ படம் கிடையாது: இயக்குநர் பாலாஜி குமார்

விஜய் ஆண்டனி இல்லாமல் ‘கொலை’ படம் கிடையாது: இயக்குநர் பாலாஜி குமார்

Published on

சென்னை: விஜய் ஆண்டனி, மீனாட்சி சவுத்ரி, ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘கொலை’. பாலாஜி குமார் இயக்கியுள்ளார். கிரீஷ் கோபால கிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் நாளை வெளியாகிறது.

படம் பற்றி செய்தியாளர்களிடம் பாலாஜி குமார் கூறியதாவது: விஜய் ஆண்டனி இல்லாமல் இந்தப் படம் கிடையாது. அவர்தான் கதை மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர்களிடம் பேசினார். படத்தில் பிளாஷ்பேக், அதற்குள் பிளாஷ்பேக் என பார்வையாளர்களின் கவனத்தைக் கோரும் படம் இது. நம் ஊரின் வளம் அனைவருக்கும் தெரியும்படி இதில் கொண்டு வந்திருக்கிறேன். ஒளிப்பதிவு, இசை என அனைத்து தொழில்நுட்ப விஷயங்களையும் அற்புதமாகச் செய்திருக்கிறார்கள். விஜய் ஆண்டனியிடம் இயல்பாகவே குறும்பு இருக்கிறது. அதையும் கொண்டு வர வேண்டும். அதே நேரம் அவர் கொஞ்சம் சீரியஸாகவும், வயதான தோற்றத்திலும் இருக்க வேண்டும். அதைச் சிறப்பாகச் செய்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in