Published : 20 Jul 2014 10:31 AM
Last Updated : 20 Jul 2014 10:31 AM

காதல் தண்டபாணி மாரடைப்பால் காலமானார்

‘காதல்’ படத்தில் அறிமுகமாகி பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்த தண்டபாணி ஞாயிற்றுக்கிழமை காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை(இன்று) அவரது சொந்த ஊரான திண்டுக்கல்லில் நடக்கிறது.

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘காதல்’ படத்தில் அறிமுகமானவர் தண்டபாணி (71). இந்தப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அவர் அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் 160 படங்களுக்கும் மேல் நடித்தார். தமிழில் 'சித்திரம் பேசுதடி', 'உனக்கும் எனக்கும்', ‘முனி’, 'வேலாயுதம்', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக ‘சண்டமாருதம்’ படத்தில் நடித்துக்கொண்டிருந்த தண்டபாணி, சனிக்கிழமையன்று திருவேற்காட்டில் இப்படத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண் டுள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை காலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந் துள்ளார்.

திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன் தண்டபாணி, திண்டுக்கல்லில் பொட்டுக்கடலை வேர்க்கடலை வியாபாரம் செய்திருக்கிறார். தண்டபாணியின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். திங்கள் கிழமை(இன்று) நடக்கும் இறுதி சடங்குக்காக அவரது உடல் ஞாயிற்றுக்கிழமையே சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டது. நடிகர் தண்டபாணிக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x