Last Updated : 31 Aug, 2017 06:45 PM

 

Published : 31 Aug 2017 06:45 PM
Last Updated : 31 Aug 2017 06:45 PM

தீபாவளி வெளியீட்டில் மெர்சல் உடன் தீரன் அதிகாரம் ஒன்று போட்டி?

தீபாவளி வெளியீட்டில் விஜய்யின் 'மெர்சல்' படத்தோடு கார்த்தியின் 'தீரன் அதிகாரம் ஒன்று' படமும் வெளியாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'சதுரங்க வேட்டை' வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தாண்டு புதன்கிழமை அன்று தீபாவளி பண்டிகை வருகிறது. அன்றைய தினத்தில் வெளியிட்டால் 5 நாள் வசூல் அள்ளலாம் என்பது தான் திட்டமாக இருக்கிறது.

ஏற்கெனவே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் விஜய் நடித்திருக்கும் 'மெர்சல்' படமும் தீபாவளி வெளியீடு என்று அறிவித்து விளம்பரப்படுத்தும் பணிகளைத் துவங்கியுள்ளது.

மேலும் 'குலேபகாவலி', 'ஹர ஹர மஹாதேவகி', 'சொல்லிவிடவா', 'நெஞ்சில் துணிவிருந்தால்' ஆகிய படங்களும் தீபாவளி வெளியீட்டை உறுதிப்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x