Published : 24 Nov 2017 10:40 AM
Last Updated : 24 Nov 2017 10:40 AM

பேசும் படங்கள்: காதலனைக் கரம் பிடித்தார் நமீதா; திருப்பதியில் திருமணம் நடந்தது

நடிகை நமீதா, வீரேந்திர சவுத்தரியின் திருமணம் இன்று (வெள்ளிக்கிழமை) திருப்பதியில் நடைபெற்றது.

நடிகை நமீதா, குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்தவர். தன் 15-வது வயதில் மிஸ் சூரத் பட்டம் பெற்ற நமீதா 2002-ம் ஆண்டு முதன்முதலில் 'சொந்தம்' எனும் தெலுங்குப் படத்தில் அறிமுகமானார். தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சரத்குமார், சத்யராஜ். அஜித், விஜய், அர்ஜூன் உடன் பல்வேறு படங்களில் நடித்த நமீதா இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என ஐந்துமொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நவம்பர் 24-ம் தேதி தயாரிப்பாளர் மற்றும் நடிகர் வீராவை திருமணம் செய்யவுள்ளதாக நமீதா வீடியோ பதிவொன்றில் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் நமீதா - வீரா திருமணம் இன்று (நவ.24) திருப்பதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகைச் சேர்ந்த பலரும் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். தமிழ்த் திரையுலகம் சார்பில் சரத்குமார், ராதிகா, ஆர்த்தி, காயத்ரி ரகுராம், ஷக்தி ஆகியோர் திருமணவிழாவில் பங்கேற்று நமீதாவை வாழ்த்தினர்.

வடிவுடையான் இயக்கத்தில் பரத், நமீதா, இனியா நடித்த 'பொட்டு' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x