Published : 10 Jul 2014 09:22 am

Updated : 10 Jul 2014 16:06 pm

 

Published : 10 Jul 2014 09:22 AM
Last Updated : 10 Jul 2014 04:06 PM

வார ராசி பலன் 10-07-2014 முதல் 16-07-2014 வரை (துலாம் முதல் மீனம் வரை)

10-07-2014-16-07-2014

துலாம்

துலாம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 8-ல் சுக்கிரன், 9-ல் தன் சொந்த வீட்டில் புதன் உலவுவதால் குடும்ப நலம் சீராக இருந்துவரும். பண வரவு அதிகரிக்கும். முக்கியமான சில காரியங்கள் இனிது நிறைவேறும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

பெண்கள் நோக்கம் நிறைவேறும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். வியாபாரம் பெருகும். தெய்வப் பணிகள், தர்மப்பணிகளில் ஈடுபாடு கூடும். 14-ம் தேதி முதல் சுக்கிரன் 9-ம் இடம் மாறுவதால் தர்ம குணம் மேலோங்கும். மாணவர்கள் நிலை உயரும். வெளிநாடு சென்று கல்வி பயில சிலருக்கு யோகம் கிடைக்கும். 14-ம் தேதி முதல் செவ்வாய் ஜன்ம ராசிக்கு இடம் மாறி வக்கிர சனியுடன் கூடுவது சிறப்பாகாது. அலைச்சலும் உழைப்பும் அதிகமாகும். இயந்திரப்பணியாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படவும். பயணத்தின்போது எச்சரிக்கை தேவை. வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 11, 14, 16

திசைகள்: வடமேற்கு, வடக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: மெரூன், பச்சை, வெண்மை, இளநீலம்

எண்கள்: 5, 6, 7

பரிகாரம்: துர்கை, சுப்பிரமணியரை வழிபடவும்.விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராகுவுடன் கூடி லாப ஸ்தானத்தில் உலவுவது விசேஷமாகும். புதன் 8-ல், குரு 9-ல் உலவுவதால் செல்வாக்கும் மதிப்பும் கூடும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். செல்வநிலை உயரும். பணம் கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். முன்னேற்றத்துக்கான நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். தெய்வப் பணிகளிலும் தர்மப் பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். உத்தியோகஸ்தர்கள் நிலை உயரும். ஆசிரியர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் மதிப்பு கூடும். 14-ம் தேதி முதல் சுக்கிரன் 8-ம் இடம் மாறுவதால் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். கணவன் மனைவி உறவுநிலை சீராகும். 14-ம் தேதி முதல் செவ்வாய் 12-ம் இடம் மாறி வக்கிரச் சனியோடு கூடுவதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது அவசியம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 11, 14, 16

திசைகள்: தெற்கு, வடகிழக்கு, வடக்கு, தென்மேற்கு

நிறங்கள்: பொன் நிறம், சிவப்பு, வெண்சாம்பல் நிறம்

எண்கள்: 3, 4, 5, 9

பரிகாரம்: விநாயகரை வழிபடவும். ஆதித்ய ஹ்ருதயம் சொல்வது நல்லது.தனுசு

தனுசு ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், ராகு, 11-ல் சனி உலவுவதால் சுபச் செலவுகள் கூடும். குடும்ப நலம் சிறக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். வேலையாட்களால் அனுகூலம் உண்டாகும். சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். 4-ல் கேது, 6-ல் சுக்கிரன், 7-ல் சூரியன் புதன் உலவுவதால் சுகம் குறையும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வீண் ஆடம்பரம் கூடாது.

கேளிக்கை, உல்லாசங்களைக் குறைத்துக் கொள்ளவும். குரு 8-ல் இருப்பதால் உடல்நலனில் கவனம் தேவை. தொழிலதிபர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. 14-ம் தேதி முதல் சுக்கிரன் 7-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. 14-ம் தேதி முதல் செவ்வாய் 11-ம் இடம் மாறுவதால் இயந்திரப் பணிகள் லாபம் தரும். பொதுப்பணிகளில் ஈடுபாடு கூடும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். நீண்ட நாளைய எண்ணம் ஒன்று ஈடேறும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 11, 14, 16

திசைகள்: தெற்கு, தென்மேற்கு, மேற்கு

நிறங்கள்: நீலம், சிவப்பு, பச்சை

எண்கள்: 4, 8, 9

பரிகாரம்: குரு, சுக்கிரன், கேது ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும். சுமங்கலிப் பிரார்த்தனை செய்துகொள்ளவும். குடும்பப் பெரியோர்களை வணங்கி வாழ்த்துக்களைப் பெறவும்.மகரம்

மகர ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன், புதன், 7-ல் குரு, 10-ல் சனி உலவுவது சிறப்பாகும். வாழ்வில் முன்னேற்றம் காண வாய்ப்புக்கள் கூடிவரும். பெரியவர்களும் தனவந்தர்களும் உதவுவார்கள். பொருளாதார நிலை உயரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். மகப்பேறு அல்லது பிள்ளைகளால் பாக்கியம் உண்டாகும். கலைஞர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும்.

எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். 14-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. பெண்களுக்குப் பிரச்னைகள் சூழும். தொழிலில் அதிக கவனம் தேவை. 14-ம் தேதி முதல் செவ்வாய் 10-ம் இடம் மாறுவதால் இயந்திரப்பணிகள் லாபம் தரும். சொத்துக்கள் சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 14, 16

திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு, மேற்கு

நிறங்கள்: இளநீலம், வெண்மை, பொன் நிறம், ஆரஞ்சு

எண்கள்: 1, 3, 5, 6, 7

பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடவும்.கும்பம்

கும்ப ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சொந்த வீட்டிலும் உலவுவது சிறப்பாகும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். சுகானுபவம் உண்டாகும். கலைஞானம் சிறக்கும். பெண்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். மக்களால் அளவோடு நலம் ஏற்படும். வியாபாரிகளுக்குத் திறமைக்குரிய லாபம் கிடைத்துவரும். மாணவர்கள் தங்கள் தகுதிக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள்.

இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். பயணத்தின்போது விழிப்புத் தேவை. பொருள் கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை அவசியம். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். 14-ம் தேதி முதல் சுக்கிரன் 5-ம் இடம் மாறுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். 14-ம் தேதி முதல் செவ்வாய் 9-ம் இடம் மாறுவதால் தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு ஓரளவு பயன்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 11, 16

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு

நிறங்கள்: பச்சை, இளநீலம், வெண்மை

எண்கள்: 5, 6

பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிக்கவும். நாகரை வழிபடவும்.மீனம்

மீன ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரன், 4-ல் புதன், 5-ல் குரு சஞ்சரிப்பதால் தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். பெற்றோரால் பிள்ளைகளுக்கும் பிள்ளைகளால் பெற்றோருக்கும் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். மாணவர்களது நிலை உயரும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், உத்தியோகஸ்தர்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும்.

பணவரவு அதிகரிக்கும். ஸ்பெகுலேஷன் துறைகள் ஆதாயம் தரும். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோரது நிலை சிறப்பாக இல்லாததால் அலைச்சல் அதிகரிக்கும். கடுமையாக உழைக்க வேண்டிவரும். புதியவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. வீண் செலவுகளைத் தவிர்க்கவும். 14-ம் தேதி முதல் சுக்கிரன் 4-ம் இடம் மாறுவதால் கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். 14-ம் தேதி முதல் செவ்வாய் 8-ம் இடம் மாறி, சனியுடன் கூடுவதால் குடும்ப நலனிலும் தந்தை நலனிலும் சகோதர நலனிலும் கவனம் தேவை. வீண்வம்பு கூடாது. எதிலும் நிதானம் தேவை. அவசரம் கூடவே கூடாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 11, 14

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, வடக்கு

நிறங்கள்: இளநீலம், வெண்மை, பொன் நிறம், பச்சை

எண்கள்: 3, 5, 6

பரிகாரம்: விநாயகர், துர்கை, ஆஞ்சநேயர் வழிபாடு நலம் தரும்.

ராசி பலன்வார ராசி பலன்ராசிபலன்சந்திரசேகரபாரதி

You May Like

More From This Category

More From this Author