பாரிஸ் எனக்கு எப்போதும் ஸ்பெஷல்! - ஹன்சிகா மகிழ்ச்சி

பாரிஸ் எனக்கு எப்போதும் ஸ்பெஷல்! - ஹன்சிகா மகிழ்ச்சி
Updated on
1 min read

சென்னை: நடிகை ஹன்சிகா இப்போது ‘பார்ட்னர்’ படத்தில் ஆதியுடன் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 28-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தனது குடும்பத்துடன் பிரான்ஸ் சென்றுள்ளார் ஹன்சிகா.

இதுபற்றி அவர் கூறும்போது, “என் அம்மாவின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் வெளிநாடு செல்வது வழக்கம். இந்த முறை பிரான்ஸ் செல்ல முடிவு செய்தோம். அதன்படி பாரிஸ் வந்துள்ளேன். இது எனக்கு ஸ்பெஷலான இடம். உலகில் எனக்குப் பிடித்த நகரங்களில் பாரிஸும் ஒன்று. நான் நடித்த முதல் மெகா பட்ஜெட் படமான ‘எங்கேயும் காதல்’படப்பிடிப்பு இங்குதான் நடந்தது. அதனால் இந்த நகரம் எனக்கு எப்போதும் ஸ்பெஷல். இது சுற்றுலா செல்பவர்களுக்குப் பாதுகாப்பானது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in