‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இயக்குநருக்கு எலும்பு முறிவு

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இயக்குநருக்கு எலும்பு முறிவு

Published on

சென்னை: விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், இயக்குநர் மகிழ் திருமேனி, கரு பழனியப்பன் உட்பட பலர் நடித்த படம், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ . சந்திரா ஆர்ட்ஸ் தயாரித்த இந்தப் படத்தை, ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கியிருந்தார். இந்தப் படம் மே மாதம் வெளியானது. அடுத்த பட வேலைகளில் அவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில், சில தினங்களுக்கு முன் தடுமாறி விழுந்ததில் வலதுகாலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in