‘புராஜெக்ட் கே’ படத்தில் கமல்ஹாசன்: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘புராஜெக்ட் கே’ படத்தில் கமல்ஹாசன்: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published on

ஹைதராபாத்: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் ‘புராஜெக்ட் கே’ படத்தில் கமல்ஹாசன் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிக்கும் படம் ‘புராஜெக்ட் கே’. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

சயின்ஸ் ஃபிக்‌ஷன் பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் வில்லனாக நடிக்க கமல்ஹாசன் ஒப்பந்தமாகியிருப்பதாக கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இந்த நிலையில் படக்குழு தற்போது இத்தகவலை உறுதி செய்துள்ளது. ‘புராஜெக்ட் கே’ படத்தில் கமல்ஹாசன் இணைந்துள்ளதாக வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு ரூ.150 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in