

ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘யோக்கியன்’. மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி.மாதேஷ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜெயசதீசன் நாகேஸ்வரன் கதை எழுதி உள்ளார். சாய் பிரபா மீனா இயக்கியுள்ளார். குஷி முகர்ஜி, ஆர்த்தி சுரேஷ், கவிதா, தேவிகிருபா, சாம்ஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில், ஜெய் ஆகாஷ் பேசும்போது, “அயோக்கியனை காட்டினால்தான் யோக்கியனை காட்ட முடியும் . இதுதான் இந்தப் படத்தின் கதை. இதில் 4 கதைகள் இருக்கிறது. சாய் பிரபா மீனா இயக்குநராக ஜெயிக்க வேண்டும் என்பதற்காக இந்தக் கதையை நான் கொடுத்தேன். தற்போது சிறிய படங்களுக்கு தியேட்டர் தர மறுக்கிறார்கள். அதனால் ஒடிடி-யில் ரிலீஸ் செய்ய எண்ணியிருந்தேன். தியேட்டரில்தான் ரிலீஸ் ஆக வேண்டும் என்று இயக்குநர் கேட்டார் . அதனால் தியேட்டரில் ரிலீஸ் ஆக இருக்கிறது” என்றார்.