

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். தமிழில் ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்து வருகிறார்.
கடந்த 2020-ம் ஆண்டு கவுதம் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட அவருக்கு ஒரு மகனும் உள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர், குழந்தையுடன் நேரம் செலவிட முடியாததால் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, அதை மறுத்தார்.
“சினிமாவில் இருந்து ஒரு போதும் விலக மாட்டேன். ரசிகர்கள் மீது எனக்கு அதிக அன்பு இருக்கிறது. அதை எளிதில் விட்டுவிட மாட்டேன். என் தொழிலும் குடும்ப வாழ்க்கையும் தனித்தனியாகவே இருக்கிறது. அது தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.