Published : 12 Jun 2023 06:17 PM
Last Updated : 12 Jun 2023 06:17 PM

‘ஜவான்’ எடிட்டிங் நிறைவு, ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் - இது ஷாருக்கான் அப்டேட்

ட்விட்டரில் ரசிகர் ஒருவர், ‘‘இன்று மாலை என்ன ப்ளான்’’ என கேட்ட கேள்விக்கு “அட்லீயுடன் இணைந்து ‘ஜவான்’ படத்தை பார்க்கலாம் என யோசிக்கிறேன்” என ஷாருக்கான் பதிலளித்துள்ளார்.

‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லி இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. முதலில் ஜூன் 2-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடையாததால் வரும் செப்டம்பர் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ட்விட்டரில் ‘AskSRK’ என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் ஷாருக்கானிடம் கேள்விகளை முன்வைத்தனர். அப்போது ரசிகர் ஒருவர், “இன்று மாலை என்ன ப்ளான்’’ என கேட்ட கேள்விக்கு “அட்லீயுடன் இணைந்து ‘ஜவான்’ படத்தை பார்க்கலாம் என யோசிக்கிறேன்” என ஷாருக்கான் பதிலளித்துள்ளார். இதன் மூலம் ‘ஜவான்’ படத்தொகுப்பு முடிந்துள்ளதை ஷாருக்கான் உறுதி செய்திருப்பதாக ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்றொரு ரசிகர், ‘ஜவான் படத்துக்கு புரமோஷன் பெரிய அளவில் இருப்பதாக தெரியவில்லையே?’ என கேட்டதற்கு, “நீங்கள் கேட்டதே புரமோஷன்தான்” என பதிலளித்துள்ளார். ‘உங்களுக்கு எந்த படம் சவாலாக இருந்தது டங்கியா? ஜவானா?’ என கேட்டிருந்த ரசிகரின் கேள்விக்கு, “ஜவான் படத்தில் நிறையவே ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளன” என ஷாருக்கான் பதிலளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x