Published : 05 Oct 2017 19:43 pm

Updated : 06 Oct 2017 09:38 am

 

Published : 05 Oct 2017 07:43 PM
Last Updated : 06 Oct 2017 09:38 AM

ரசிகர்களின் முதல்நாள் ஆரவாரத்துக்காக காத்திருக்கிறேன்: மெர்சல் குறித்து அஸ்வின்

 

ரசிகர்களின் முதல்நாள் ஆரவாரத்துக்காக ஆவலுடன் காத்திருப்பதாக 'மெர்சல்' படம் குறித்து அஸ்வின் தெரிவித்திருக்கிறார்.


அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மெர்சல்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம், அக்டோபர் 18-ம் தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் இப்படத்தின் தலைப்பு சர்ச்சைக் குறித்து நாளை (அக்டோபர் 6) தீர்ப்பு வரவுள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

'மெர்சல்' எனும் திருவிழாப் படத்துக்கு காரசாரமான தொடக்கமாக இந்த டீசர் அமைந்துள்ளது, ரசிகர்களின் முதல்நாள் ஆரவாரத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மெர்சல்அஸ்வின் ட்வீடரசிகர்களின் ஆரவாரம்விஜய்இயக்குநர் அட்லீசமந்தாகாஜல் அகர்வால்நித்யா மேனன்எஸ்.ஜே.சூர்யா

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x