Published : 28 Oct 2017 18:55 pm

Updated : 28 Oct 2017 18:55 pm

 

Published : 28 Oct 2017 06:55 PM
Last Updated : 28 Oct 2017 06:55 PM

டிசம்பர் 1-ம் தேதி வெளியாகிறது திருட்டுப்பயலே 2

1-2

சுசிகணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'திருட்டுப்பயலே 2' டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

'திருட்டுப்பயலே 2' படத்தின் இறுதிகட்டப் பணிகள் முடிவுற்று, வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. பல்வேறு படங்களின் வெளியீட்டால் இப்படம் செப்டம்பர் வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது.


அதனைத் தொடர்ந்து 'நவம்பர் முதல் வாரத்தில் 'திருட்டுப்பயலே 2' வெளியாகும்' என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். ஆனால், நவம்பரிலும் பல்வேறு படங்கள் தங்களது வெளியீட்டை உறுதிசெய்திருப்பதால், தற்போது டிசம்பர் 1-ம் தேதி வெளியீடு என்று படக்குழு உறுதிப்படுத்தியிருக்கிறது.

பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'திருட்டுப்பயலே - 2'. வித்யாசாகர் இசையமைத்துள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author