Last Updated : 10 Oct, 2017 05:31 PM

 

Published : 10 Oct 2017 05:31 PM
Last Updated : 10 Oct 2017 05:31 PM

Mr. சந்திரமெளலி அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் மகேந்திரன் & அகத்தியன் ஒப்பந்தம்

கார்த்திக் - கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் 'Mr. சந்திரமெளலி' படத்தில் இயக்குநர்கள் மகேந்திரன் மற்றும் அகத்தியன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குவதற்காக 'Mr. சந்திரமெளலி' படக்குழு தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர்கள் மகேந்திரன் மற்றும் அகத்தியன் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் இயக்குநர் மகேந்திரன் தொழிலதிபராக நடிக்கவுள்ளார்.

திரு இயக்கத்தில் நடிக்க கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா, வரலெட்சுமி சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். கவுதம் கார்த்திக் தன் தந்தையுடன் நடிக்கும் முதல் படம் இது.

திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் இணையதள மீடியாக்களில் கால் பாதிக்கும் பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா என்ற புதிய மீடியா நிறுவனத்திற்காக கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x